#SG50_தமிழ்மரபு #மரபுப்பாடல் அறுசீர் விருத்தம்! வீடமைப்பு பேட்டை! அடுக்குமாடி வீட மைத்து அத்தனையும் அருகில் வைத்து இடுக்கணின்றி சொகுசாய் வாழ இல்லமுண்டு அனைவ ருக்கும் கெடுதலில்லா சுற்றுச் சூழல் கேடில்லா பேட்டை உண்டு தொடுத்தநல்ல பூப்போல் மக்கள் தோழமையாய் வாழ்வர் இங்கு (1)