Google office

It was like visiting a Star Hotel than a work place. Starting from the Reception to Cafeteria everything is designed with the purpose, artistically.

They have brainstorming rooms with wall to scribble, quiet think-tank corners, lobby and open places which provide an ambience to innovate and excel.

Every department has its own micro kitchen, vending machine with all sorts of soft drinks, healthy staples.

The main cafeteria has a juice corner where you can make your own juice. Soup with different flavours, Salad counter, various cuisines like Western, Chinese, Indian, Peranakan etc. Also, you can find a ice cream stall, ice kachang hut and a coffee shop.

All you can have without paying a single cent, if you are an employee or guests of this organization. You know something, I had lunch there and it was really nice with quite bit of spread.

There is a fully equipped Gym, Games room, Music room, Spa and Saloon inside the office. If an employee wants to take a nap, they have a sleeping room as well:) There is also a Wellness Garden where you can wander around. Basket Ball court outside the office premises for the employees. But I couldn’t manage to see those because of the entry restrictions.

The office is spread across 3 buildings in 15 floors together. You can walk up the stairs to reach out to design or engineering or any other divisions.

If you are wondering which office I am referring to, it’s nothing but Google’s Office. I am not referring to the one in US or any other country but Google’s APAC headquarters opened last year in Singapore.

தமிழ் மொழி விழா 2017

இந்தாண்டு தமிழ் மொழி விழாவில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் அடிப்படையில் விழா குறித்தான என்னோட கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன். இதில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம். நாகரிகமான, ஆக்கப்பூர்வமான, தனி நபர் தாக்குதல் இல்லாத எந்தக் கருத்தும் வரவேற்கப்படும். மற்றவை கழிக்கப்படும்.

1. இந்த ஆண்டு தமிழ்மொழி விழா எப்படி இருந்தது?

இந்த ஆண்டு தமிழ்மொழி விழாவில் நடைபெற்ற 52 நிகழ்வில், மொத்தம் 23 நிகழ்வுகளில் நான் கலந்துகொண்டேன். கடந்த ஆண்டு 43 நிகழ்வில் 15 நிகழ்வுகளில் நான் கலந்துகொண்டேன். கடந்த ஆண்டு நடந்த 4 நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு இல்லை. இந்த ஆண்டு அவை தவிர 13 நிகழ்ச்சிகள் புதிதாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நிறைய மாறுதல்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏறக்குறைய அதே அமைப்பினர்கள்தான். ஆனால், புதிய நிகழ்வுகள், புதிய முகங்கள், நிகழ்ச்சியின் தரம், அரங்கு நிறைந்த கூட்டம் இப்படிப் பல நல்ல அம்சங்கள் இருந்தன.

2. சரி, இந்த நிகழ்ச்சிகள் யாரைச் சென்றடைந்தன?

கண்டிப்பாக நிறைய இளையர்களைச் சென்றடைந்தன. அதிலும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய பார்வை நிகழ்ச்சியில் முற்றிலும் இளையர்களே அரங்கம் முழுதும் காணப்பட்டனர். கிட்டதட்ட 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக இல்லை மாணவர்களை மையப்படுத்தி நடந்த நிகழ்ச்சிகள். இதில் 10க்கும் மேற்பட்டவை மாணவர்கள்/பள்ளிகள் ஏற்று நடத்திய நிகழ்ச்சிகள். மற்ற நிகழ்ச்சிகளில் 10க்கும் மேற்பட்டவை மாணவர்கள் பெரும் அளவில் பங்குபெற்ற நிகழ்ச்சிகளாகும். பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள் அதிக அளவில் இந்த ஆண்டு கலந்துகொண்டனர்.

3. சுமார் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சிகளை நேரில் கண்டு களித்திருப்பார்கள்?

என்னுடைய கணிப்புப்படி, பொன்னியின் செல்வன் மட்டும் சுமார் 4000 பேருக்கு மேல் பார்த்திருப்பர்கள்.

மேலும் படிக்க…

கவிமாலை விழா

கடந்த 30-ஏப்ரல்-2017, ஞாயிறன்று மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கவிமாலையின் செந்தமிழ்ச் செல்வர் வை திருநாவுக்கரசர் புகழ் போற்றும் விழாவும், தமிழ் மொழி மாத நிறைவு விழாவும் ஒருங்கே நடந்தது.
தலைமை உரையாற்றிய கவிமாலையின் தலைவர் திரு இறை மதியழகன், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சான்றோர் ஒருவரை போற்றும் விழாவாக தமிழ் மொழி மாதத்தில் விழா எடுத்து வருவதாகவும், உள்ளூரில் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களின் பெருமையை போற்றும் வண்ணம் கடந்த ஆண்டு மூவருக்கு புகழாரம் சூட்டிய கவிமாலை இவ்வாண்டு உள்ளூர் படைப்பாளிகள் பலருக்கு தளம் அமைத்து கொடுத்த திரு வை. திருநாவுக்கரசு அவர்களுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறது என்றார்.

மாணவர்கள் கவிதை வாசித்தல்
—————————————————–

 பொங்கோல் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மிக அழகாக முத்திரை கவிதைகளை பெரும்பாலும் பார்க்காமல் படித்தனர். நம்முடைய கவிதையே நாமே மறந்து போகும் நிலையில் மாணவர்கள் மற்றவர்களின் கவிதைகளை சிறப்பாக நினைவில் வைத்து ரசித்து படித்தனர். மூளையை துளைத்த கவிதை, சிறந்த கற்பனை  கவிதை, மனதுக்கு பிடித்த கவிதை என கடைசி நாள்களில் வெளியிடப்பட்ட ஒரு சிலரது கவிதைகள் தவிர, மற்ற அனைத்து ‘முத்திரை வரிகளும்’ மேடையில் பல சுற்றுகளாக படிக்கப்பட்டன. இதில் சிறந்தது, சிறப்பில்லாதது என்று மாணவர்கள் பிரித்து பார்க்கவில்லை. நல்ல பயிற்சி. சிறந்த முயற்சி. அந்த மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட நினைவு பரிசு பார்வைக்கு நன்றாக இருந்தது. என்ன பரிசு என்று அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக கவிதைப் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அந்த பயிலரங்கில் கலந்துகொண்டு கவிதை எழுதும் போட்டியில் பென்டமியர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த துரை குமரனும், குழலி சரவணனும் முதல் பரிசைப் பெற்றனர். இவ்வாண்டு முதல்முறையாக மாணவர்களுக்கு கவிதை மனனப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவிதை மனனப் போட்டியில் ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கோபிகா நரசா லட்சுமியும் போத்தோங் பாசிர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முத்து சுவேதாவும் முதல் பரிசை வென்றனர்.
கவிதைப் பயிலரங்கு நடத்திய மன்னை ஐயாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஏப்ரல் மாதத்திற்கான ‘எதிர்மறை’ எனும் தலைப்பில் கவிதைப் போட்டிக்கான கவிதை எழுதி வென்றவர்களுக்கும் நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க…

கவிமாலையின் முத்திரை வரிகள்

சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு, ஓர் புத்தாக்க சிந்தனையாக கவிஞர்களின் சிறந்த கவிதையை, முத்திரை வரிகளை அதற்கேற்ப கருத்து படங்களுடன் சிறப்பான வடிவமைப்பில் இப்போது எல்லோரும் அதிகம் புழங்கும் ‘வாட்ஸப்’, முகநூலில் தமிழ்மொழி விழாவினையொட்டி தினந்தோறும் வெளியீடு செய்து வந்தது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தமிழறிஞர்கள் முதல் தமிழ் ஆர்வலர்கள் வரை, புலவர்கள் முதல் புரவலர்கள் வரை, மாணவர்கள் முதல் மந்திரிகள் வரை, சிங்கையில் மட்டுமன்றி பல வெளிநாட்டிலுள்ள தமிழர்களையும் சென்றைடைந்தது. இதற்காக உழைத்தவர்கள் பலர். இது கவிமாலை, கவிஞர்களுக்கு செய்த மிகப் பெரிய சிறப்பு. இதை தொடக்கத்திலிருந்தே மிகவும் ஊக்குவித்து ஆதரவு நல்கிய வளர்தமிழ் இயக்கித்தின் தலைவர் திரு இராஜாராம் அவர்களுக்கு நன்றி.

எதையும் வேகமாக கடந்து செல்லும் இந்த அவசர யுகத்தில் சின்னதாய், அழகாய் நான்கு வரிகளில் கவிதையை வெயீடு செய்யும் இந்த திட்டத்தை யோசித்து, வடிவமைத்து, சிறப்பாக செயல்படுத்திய கவிமாலை தலைவர் திரு இறை மதியழகன் அவர்களுக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும், ‘முத்திரை வரிகள்’ தேர்வு குழுவிற்கும் மற்றும் திட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.

மேலும் படிக்க…

கவிமணம்

தமிழ்மொழி விழாவினையொட்டி சிங்கப்பூர் இந்தியர் சங்கம் நடத்திய “கவிமணம்” நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை, 07-ஏப்ரல்-2017 மாலை 7:30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது. பாரதியாரின், “வாழ்க தமிழ்மொழி..” பாட்டுதான் இங்கேயும் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்தது. இது குறித்து தனி பதிவு பிறகு எழுதுகிறேன்.

“கவிமணம்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த கவிதை போட்டி குறித்த அறிவிப்பு பரவலாக பகிரப்பட்டது. ஆனால், ஏனோ கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி அந்த போட்டியில் கலந்துகொள்ளவதில் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. அதற்கு காரணம் அதே காலகட்டத்தில் பல கவிதை போட்டிகள் நடைபெறுகின்றன. எதற்காக இவர்களும் கவிதை போட்டி நடத்துகிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்ததுண்டு. ஆனால் இவர்கள் நடத்திய கவிதை போட்டியில் இரண்டு சிறப்பம்சங்கள் உண்டு. ஒன்று சிங்கப்பூரர்கள், நிரந்திரவாசிகள் ஒரு பிரிவாகவும். சிங்கப்பூரில் படிக்கும்/வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் இரண்டு போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட்டது. இது எனக்கு தெரிந்து வேறு யாரும் செய்யாத ஒரு விஷயம். அடுத்து ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுவாக மூன்று பரிசுகள் மட்டும் கொடுக்கும் போட்டிகள் போல் இல்லாமல் ஐந்து பரிசுகள் கொடுத்தது மற்றொரு சிறப்பு. அதுவும் பரிசுத்தொகை கவர்ச்சிகரமானது. முதல் பரிசு $1000 என தொடங்கி $700, $500, $300 என்ற வரிசையில் ஐந்தாவது பரிசு $200 வெள்ளி கொடுக்கப்பட்டது. போட்டிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரு பிரிவுகளும் சேர்த்து 50க்கும் மேற்பட்ட கவிதைகள் போட்டிக்கு வந்திருந்தன.

மேலும் படிக்க…