தி சிட்டிஸ் ஆஃப் மெலாக்கா

ஏழு நாட்கள், ஏழு நூல்கள், ஏழு நண்பர்களை இணைத்தல் என்ற தொடரில் Rengaprasath Gopalakrishnan, Malarvizhi Elangovan ஆகியோர்கள் என்னை கோர்த்துவிட்டார்கள். இதில் விளக்கமோ, விமர்சனமோ வேண்டோம் ஆனால் அட்டைப்படம் மட்டும் முகநூலில் போட்டால் போதுமானது என கடைசியில ஒரு கடலைமிட்டாய் வேற கொடுத்தார்கள். ஆனால் எனக்கு தெரிந்து நிறைய பேர் சொந்தக்கதை, முன்னுரை, பின்னுரை என பல விளக்கங்களோடுதான் பதிவு போட்டார்கள். அந்த வரிசையில் நாமும்…. புத்தகத்திலுள்ள விஷயங்களை ’அடிஷனல் பேப்பருடன்’……….ஆனால் தொடர்ந்து ஏழு நாட்கள் முடியாது. எனக்கு புத்தகப் பதிவு போட நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக போடுவேன்…

இன்றைய புத்தகம் ‘தி சிட்டிஸ் ஆஃப் மெலாக்கா’. இந்தப் புத்தகத்தை 3 மாதங்களுக்கு முன்னர் என் மகளுக்காக வாங்கினேன். அவர்கள் பள்ளியில் செட்டி மலாக்கா பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று கூறியதால், தகவல்கள் பெற நண்பரிடம் சொல்லி வாங்கினேன். ஆனால் புத்தகம் வருவதற்குள் கட்டுரைக்கான தேதி முடிந்துவிட்டது:(
சரி, புத்தகத்துக்குள்ள போவோமா…

இந்தப் புத்தகத்தை மலேசிய அருங்காட்சியகத் துறை கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் வெளியிட்டிருக்கிறது. சிங்கப்பூரில் நாளை மாலை இந்திய மரபுடைமை நிலையத்தில் இதன் ஆசிரியர்கள் கேரன் லோ & ஜெகதீசன் வேலுபிள்ளை புத்தகத்தில் கையெழுத்து போடும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

“‘சிட்டி மெலாக்கா’ அல்லது ‘செட்டி மலாக்கா’ என்றும் அழைக்கப்படும் இந்த இனக்குழு மலேசியாவின் முதல் பெரனாக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை ‘கிளிங்’ என தொடக்கத்தில் அழைத்துள்ளார்கள். தென்னிந்தியாவில் இருந்து வணிகத்துக்காக மலாக்கா சுல்தான் ஆளுகைக்குட்பட்ட காலத்துல வந்த இவர்கள் அங்கேயே திருமணம் செய்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இந்தக் கலப்புத் திருமணத்தால் இவர்கள் மொழி, உணவு, உடை,வழிபாடு, பண்பாடு எல்லாமே இருசாராருடைய பாதிப்பும் கலந்து தனித்து விளங்குகிறது. இவர்கள் மலாக்காவில் நன்கு அறிமுகமானவர்கள் என்றாலும் மலேசியாவின் மற்ற பகுதிகளில் அவ்வளவாக அறியப்படவில்லை” என் இப்புத்தகம் சொல்கிறது.

மலேசியாவின் அப்போதைய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் இந்த புத்தகம் மலாக்காவின் சுற்றுலா வளர்ச்சிக்கும் ‘சிட்டி மலாக்கா’ பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவும் என பாராட்டி அனுப்பிய செய்தி இதில் உள்ளது. அது உண்மை என தோன்றும் அளவிற்கு 240+ பக்கம் உள்ள இந்தப் புத்தகத்தில் பல அரிய படங்களுடன் இச்சமூகத்தின் தற்கால வாழ்வியல், பண்டிகைகள்,விழாக்கள், திருமணங்கள், குழந்தை பிறப்பு, நீத்தார் நினைவு என அவர்களின் சமகால பழக்கவழகங்களை சிறப்பாக பதிவு செய்துள்ளது. ‘கம்போங் ச்சிட்டி’ என 25 வீடுகளை கொண்ட 100 பேர் கொண்ட சிறிய கிராமம் இன்றும் உள்ளது. இங்கு சில கோயில்களும், ‘சிட்டி அருங்காட்சியகமும்’ உள்ளது.

இச்சமூகத்தினரின் மூதாதையர் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என்றாலும் பதினைந்தாம் நூற்றாண்டிலுருந்து மெதுவாக வழக்கொழிந்து ‘மலாய்’ மொழியே வழக்கு மொழியானது. பின்னர் தற்போது மலாய், தமிழ், ஆங்கிலம் கலந்தே குடும்பங்களில் பேசுகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் 84 மொழிகள் பேசிய 190,000 பேர் அந்தப் பகுதியில் இருந்தாலும் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களே தங்கள் அடையாளங்களை தக்கவைத்துள்ளார்கள் என புத்தகம் சொல்கிறது.

இவர்கள் ‘இந்து’ மதத்தை பின்பற்றி இங்குள்ள கோயில்களில் பூசை வழிபாடு செய்கின்றனர், விழாக்கள் கொண்டாடுகிறார்கள். வயதுக்கு வந்த பெண்களுக்கு சடங்கு நடத்துவது குறைந்து வரும் காலக்கட்டத்தில் இவர்கள் சடங்கு விழா நடத்துவது மாறுபட்டிருக்கிறது. தாலி கட்டி திருமணம், நலுங்கு, பாலும் பழம் என பல சடங்குகள் தமிழ்த் இந்துத் திருமணங்களை ஒத்திருக்கிறது. இவர்களுடைய உணவு முறை மலாய் உணவு முறையை ஒத்திருக்கிறது.

ஒரு இனத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும்போது அதற்கு தேவையான சான்றுகளும், சரியான தரவுகளும் மிக முக்கியம். அப்படி இல்லாமல் கதை சொல்லும் போக்கில் தனக்கு வேண்டியவர்களை கதாபாத்திரங்களாக்கி அவர்களை வரலாற்று நாயகர்களாக சித்திரிப்பது அபாயகரமானது. அது ஒரு புனைவு என்ற முறையில் ஏற்றுக் கொள்ளப்படலாம். ஆனால் இந்த புத்தகத்தில் அந்த மாதிரியான எந்த இடைச்செருகலும் இல்லாமல் வரலாற்றாசிரியர் திரு சாமுவேல் துரைசிங்கம் உட்பட பல வரலாற்று ஆவணங்களை புரட்டிப்பார்த்து நிகழ்கால வாழ்வியலை அவர்களிடையே வாழ்ந்து பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் புத்தகம் நூலகத்தில் கிடைக்கலாம் ஆனால் வேறு எங்கு கிடைக்கும் என தெரியவில்லை, நாளை கேட்டுச் சொல்கிறேன்:)

         

 

மகளிர் தினம் வாழ்த்துக்கள்

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு, கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு… அட போங்கப்பா…..இன்னைக்கு பெண்கள் தினமாம்….நம்ம பெண் நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்லி பதிவ போட்டு இன்றைய நாளை பயனுள்ளதாக்குவோம்….:)

ஶ்ரீதேவி இரங்கல்

தன் அழகால், நடிப்பால் தமிழ் இரசிகர்களையும் பிறகு இந்திய திரைப்பட இரசிகர்களையும் கொள்ளை கொண்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. என்னை மிகவும் கவர்ந்த நடிகை. இன்று வரை அவருடைய அழகுடன் கூடிய நடிப்பிற்கு இணையானவர்கள் யாருமில்லை. கமல் ரசிகனாக நான் ஶ்ரீதேவியை கமலுக்கு ஜோடியாக திரையில் மிகவும் இரசித்ததுண்டு. ரஜினி ரசிகர்களும் அவரை ரஜினியின் ஜோடியாக திரையில் இரசித்திருப்பார்கள். முருக கடவுளாய் அவர் குழந்தையில் நடித்த வேடம் அவ்வளவு அழகாக இருக்கும். ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவர்ந்த ஒரு அற்புதமான நடிகை. இவருடைய திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது…ஆழ்ந்த இரங்கல்… எனக்கு பிடித்த, நான் மிகவும் இரசித்த ‘சாந்தினி’ இந்தி படத்திலிருந்து அவர் பாடிய இந்த பாடலை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்… https://m.youtube.com/watch?v=oIAWNE_pulk

ஜாங் யூன் அஞ்சலி

திங்கட்கிழமை மாலை என்னோட மகள், என்னிடம் அந்தச் செய்தியை சொன்ன போது, அதை ஒரு விஷயமாக பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து, அன்று என் மனைவி வெளியே நூலகம் செல்ல அழைத்தபோதும் வரவில்லை என்று சொல்லிவிட்டாள். அன்று இரவு பலமுறை கூறிய பிறகும், நான் தூங்கியவுடன் மறுபடியும் அது தொடர்பான செய்தியையும், காணொளியும் நடு இரவிலும் பார்த்துக் கொண்டிருந்தாள். மறுநாள், அவளிடம் பேசிய பிறகு, புரிந்துகொண்டு சற்றே இயல்பானாள். இதெல்லாம், எதற்குன்னு தானே யோசிக்குறீர்கள். அவளுக்கு மிகவும் பிடித்த பிரபல கே பாப் பாடகர் ஜாங் யூன், தன்னோட 27 வயதில் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்தே, இவ்வளவு கூத்தும்.

ஒரு அக்மார்க் இளையராஜா இரசிகருக்கு வந்து சோதனையை பார்த்தீங்களா?

சரி, அதோட முடிஞ்சுதா? அதான் இல்லை, மறைந்த அந்த இசைக்கலைஞனுக்கு, சிங்கையில் இன்று ஹாங் லிம் பூங்காவில் மாலை அஞ்சலி கூட்டம் நடக்கவிருக்கும் செய்தி அறிந்து கண்டிப்பாக கூட்டிப் போக வேண்டும் என்றாள். முதலில் மறுத்தாலும் பிறகு அவளுக்காக, பல கோடிக்கணக்கான நெஞ்சங்களை கொள்ளைக்கொண்ட அந்த இசைக் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த நானும் சென்றேன். இங்கே வந்து பார்த்த பிறகுதான் தெரிந்தது அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சோகத்துடன் கூடியிருந்தனர். அதில் 95 விழுக்காடுக்கும் மேல் இளம்பெண்களே. அதிலும் சிலர் கதறி கதறி அழுவதை பார்க்கும் போது மொழி, இனம், நாடு இவற்றையெல்லாம் தாண்டி, ஆங்கிலம் தெரியாத அந்த இளம் இசைக்லைஞன் கொரிய மொழியில் மட்டுமே பாடி எப்படியோரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறான் என்பதை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது.

அந்த கலைஞனுக்கு அவளே எழுதிய அஞ்சலி இதோ கீழே:

Below is my daughter’s condolence message:

Sorry Jong Hyun

Kim Jonghyun was born on 4th of April. Sadly he died at the age of 27. He was not only a pop singer but a great person too.

He was a Korean singer who was accepted in S.M entertainment which was one of the top three entertainment companies . He was in a K-Pop Band called Shinee.

His members were Minho, Taemin, Key and Onew. They were too close and are like brothers. They went through thick and thin.

Sometimes the problems you have, can affect you. Even when you have people who r there to go through everything with you, you will feel alone . Sometimes it feels like only you live in this world of darkness. You will always find yourself crying or pitying yourself. Soon the darkness overwhelms and you can’t help wanting to die. You want to end this darkness and the only way you see is to end your life. If you are gone, no more problems, no more sadness and no more darkness.

My friends, this is what a person with depression feels.

I am not a k pop star. I am no where near those two words. But I can imagine what he might be going through.

As a member of one of the best group in k pop there will be haters that want to see u fall. There is pressure when u have to sing in front of million people.

For those people that don’t know k pop:
A k pop singer works hard to get accepted. After they are accepted, they work hard as a trainee. Then when they are ready to debut, they have to learn the lyrics to their song and the dance for it. Then perform in front of a lot of people. All those people are staring and judging you. All that pressure.

Back to Jonghyun:
He goes through a lot of pressure and got depression. He could not take it anymore so he ended his life. He used carbon monoxide and ended his life.

His songs that we enjoyed actually had some meaning involving his depression. We never realized it.

He lastly texted his older sister telling her goodbye. By the time his sister called the police and arrived there he saw on the ground lifeless.

Jonghyun was sweet person. Funny caring and amazing. Nobody can replace him.

I am sorry for his sister, mates, friends, and family for their loss.

I saw some videos and a lot of his idol friends came to show their respect. This shows how many people’s heart he had grasped. He also grasped the heart of his fans (shawols). Leaving us was the saddest moment for everyone.

Guys even when there is no hope please don’t end your life. There is always Hope. Believe in yourselves.

We will forever remember you JongHyun. Take care up there.
#RIPJongHyun