பார்வை 2017

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் “பார்வை
2017” இந்தாண்டு தமிழ்மொழி விழாவின் மூன்றாவது நிகழ்ச்சி. வரும்
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2ம் தேதி காலை மணி 11 முதல் மதியம் மணி 1:30 வரை
உட்லான்ட்ஸ் நூலக அரங்கில் நடைபெறுகிறது. ஐந்தாவது முறையாக "பார்வை"
நிகழ்ச்சியை அரங்கேற்றும் இவர்கள் தமிழ் மொழி விழாவுக்கு புதிய வரவு.

கடந்தாண்டு சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட 'பார்வை' நிகழ்ச்சி.
இந்தாண்டு "செங்குழல் சீவிய பத்தினித் தீ"(தலைப்பே கவித்துவமா இருக்கு,
ஆர்வத்தை தூண்டுகிறது) எனும் தலைப்பில், பாஞ்சாலி சபதத்தை மையப்படுத்தி
நடைப்பெற இருக்கிறது. இதுவும் முற்றிலும் மாணவர்களுக்காக மாணவர்களால்
நடத்தப்படும் நிகழ்ச்சி. இலக்கியத்தை தொழில்நுட்ப உதவியுடன் புதிய
கண்ணோட்டத்தில் மாணவர்களிடம் கொண்டு சொல்லும் நோக்கத்துடன் ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கிறது

மூன்று முக்கிய அங்கங்களுடன் அரங்கேற இருக்கும் இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக
காணொளி போட்டி நடைபெறுகிறது. நீ ஆன் பலதுறை தொழில்நுட்பக் கல்லூரி,
தெமசக் தொடக்கக் கல்லூரி, தேம்பனீஸ் தொடக்கக் கல்லூரி என மூன்று குழுக்கள்
'பத்தினித் தீ பாஞ்சாலி', தர்மத் தலைவன்', 'சகுனியின சூழ்ச்சி' என்கின்ற தலைப்பில் 3
நிமிடம் காணொளியை திரையிடுகிறார்கள். சிறந்த படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு
பரிசுகள் கொடுக்கிறார்கள். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு நா
ஆண்டியப்பன் ஐயாவின் நாடக ஆக்கமான 'பாரதியின் பாஞ்சாலி சபதம்' புத்தகத்தை
அடிப்படையாக கொண்டு அந்த காணொளி தயாரிக்கப்பட்டிருக்கிறதாம்.

அடுத்து ஒரு பட்டிமன்றம். "வாழ்க்கையில் வெற்றி பெற சிறந்த வழி, தர்மமே!,
சூழ்ச்சியே!" என்ற தலைப்பில் நடைபெறுகிறது. 'தர்மமே' என்ற அணியில் சிங்கப்பூர்த்
தேசிய பல்கலைக்கழக மாணவர் அருள் ஓஸ்வின் மற்றும் நன்யாங் தொழில்நுட்ப
பல்கலைக்கழகத்தின் மாணவிகள் ஹஃபிஸா, ஐஸ்வர்யா தேவி பேசுகிறார்கள்.
'சூழ்ச்சியே' என்ற அணியில் திரு மன்னனை அய்யா(இது ஏதோ சூழ்ச்சி தான்:)) , திரு
சேவகன், திருமதி கிருத்திகா பேசுகிறார்கள். 45 நிமிடம் நடைபெறும் இந்த
பட்டிமன்றத்தின் நடுவர் திரு ரெ சோமசுந்தரம் ஐயா.

முக்கிய அங்கமாக பார்வையாளர் பங்கு பெறும் போட்டியும் உள்ளது. பாஞ்சாலி
சபதத்திலிருந்து 12 கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் ஓடும். அதற்கான
விடையை நாம் நம் கைப்பேசியின் மூலமாக இணையத்தில் இணைந்து சமர்பிக்க
வேண்டும். 20 நிமிடம் நடைபெறும் இந்நிகழ்ச்சி தொழில்நுட்பத்தின் உதவியால்
விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர் பார்ககலாம். பார்வையாளர்கள் நல்ல தயார்
செய்துவிட்டு வர வேண்டும்.

இன்னொரு சிறப்பு அங்கம் ஒன்று உண்டு. அது என்னவென்று அங்கே வந்து
பார்க்கவும்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு
இராஜராம் பங்கேற்கிறார்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் எளிய சிற்றுண்டி வழங்கப்படும். அதனால் நிகழ்ச்சியில் கலந்து
கொள்ள விரும்புவோர் வெள்ளிக்கிழமைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 'கூகிள்
ஃபார்ம்ஸ்' சுட்டியை சொடுக்கி முன் பதிவு செய்யவும். முடியாதவர்கள் சீக்கிரமாக
அரங்கத்திற்கு வந்து பதிவு செய்யவும். அப்பத்தான் அவர்கள் உணவு ஏற்பாடு செய்ய
வசதியாக இருக்கும்.

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

https://goo.gl/forms/tRx2oAzKaL2mo97q2

பாண்டவர் தம் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி, முன்னிழுத்து சென்றான்! 5 more days to PAARVAI 2017!! Our teams are all set to bring you a literary celebration like none other!Do register at the link with your family and friends to grab your seats NOW!#Paarvai2017 #TLF2017 Videography & Editing: @theoriginalrishihttps://docs.google.com/forms/d/1-mYk5Vz5nGcdqC2gF0IZDwVJz7g4acYlOgDnWNW7FDY/edit?usp=drive_web

Posted by NTU Tamil Literary Society on Monday, March 27, 2017

இலக்கிய நிகழ்ச்சி

இன்று "புறநானூறு குறித்து பேசுவதற்காக, புதிய சிந்தனைகளை உங்களுடைய இதய
நிலத்தில் விதைப்பதற்காக" திரு தமிழருவி மணியன் கலந்துகொள்ளும் இலக்கிய நிகழ்ச்சி.

செந்தமிழ்ச் செல்வர் வை திருநாவுக்கரசு புகழ் போற்றும் நிகழ்ச்சி.

கடந்த 30 தினங்களாக வெளியான "முத்திரை வரிகள்" படைத்த கற்பனைக்கு
சொந்தக்காரர்கள் இணையும் நிகழ்ச்சி.

கவிஞர்களை சிறப்பிக்கும் சிறப்பு நிகழ்ச்சி.

கவிதைக்கான களத்தினை கனிவாய் கொடுக்கும் கவிமாலையின் நிகழ்ச்சி.

"தமிழ்மொழி விழா 2017"யின் நிறைவு நிகழ்ச்சி.

இன்று(30-ஏப்ரல்- 2017), ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6:00க்கு உமறுப்புலவர் அரங்கில்
தமிழில் ஓர் இனிய நிகழ்ச்சி.

அனைவரும் வருக! ஆதரவு தருக!

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

மானுடம் போற்றும் மாணவர்கள்

வரும் ஞாயிற்றுக்கிழமை, 16-ஏப்ரல்- 2017 அன்று மாலை மணி 6.00க்கு உமறுப்புலவர்
தமிழ்மொழி நிலைய அரங்கில் 'மானுடம் போற்றும் மாணவர்கள்' இலக்கிய
சொற்பொழிவு நடைபெற உள்ளது.

இதை நடத்துபவர்கள், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்
சங்கம்(சிங்கை பிரிவு). கடந்த ஏழாண்டுகளுக்கு மேலாக சிங்கையில் செயல்பட்டு
வரும் இவர்கள் தமிழ்மொழி விழாவில் மூன்றாம் முறையாக பங்கேற்கிறார்கள்.

"கல்வி சார்ந்த சமூக பணி" என்பதை நோக்கமாக கொண்டு செயல்படும் ஜமால்
முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்(சிங்கை பிரிவு) மாணவர்களுக்கு
கணிதம், தேர்வுக்கு தயாராவது, நேர மேலான்மை என பல இலவச கருத்தரங்குகள்
நடத்தி வருகின்றனர்.

ஆதரவற்ற குழுந்தைகளுக்கு உதவுதல், சமய நல்லினக்க விழாக்கள் என இவர்களின்
பணி தொடர்கிறது.

கடந்த மாதம், ஶ்ரீ நாராயண மிஷனை சேர்ந்த முதியோர்களோடு சேர்ந்து
ஜமாலியன்கள் குடும்ப தின விழா கொண்டாடியது அனைவராலும் பாராட்டப்பட்டது.

தமிழ்மொழி விழா 2015ல் கவிஞர் மு மேத்தா கலந்துகொண்டு சிறப்பித்த 'நட்சத்திர
ஜன்னலிலே' என்ற நிகழ்ச்சியும், 2016ல் 'நீயா நானா' புகழ் திரு கோபிநாத்
சிறப்புரையாற்றிய 'மனதில் உறுதி வேண்டும்' என்ற நிகழ்ச்சியும் நடத்தினார்கள்.
இந்தாண்டு சிறப்புரையாற்ற வருபவர் பேராசிரியர், முனைவர் பீ மு மன்சூர். நாற்பது
ஆண்டுகளாக தமிழ் பணி ஆற்றி வரும் இவர் ஜமால் முஹம்மது கல்லூரியின்
முன்னாள் துணை முதல்வராவார்.

நிறைய தன்முனைப்பு உரையாற்றியிருக்கும் இவர் நகைச்சுவையாக மாணவர்களை
ஈர்க்கும் வண்ணம் தன் கருத்துகளை வைப்பதில் வல்லவர். நூல்கள் பல
வெளியிட்டிருக்கும் இவர் பல விருதுகளும் பெற்றுள்ளார்.

வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு ராஜாராம் முன்னிலை வகிக்க, தலைமை
உரையாற்றுகிறார் ஜமாலியன் தலைவர் முனைவர் மு அ காதர். புக்கிட் பாத்தோ
நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

சிறப்பு அங்கமாக மொழி எதற்கு? தமிழ் எதற்கு? என்ற உரையாடலை சாந்தினி,
இன்பா, பிரேமா, தமிழ்ச்செல்வி, பானு, விஜயலட்சுமி ஆகியோர் மூன்றாம் முறையாக
அரங்கேற்றுகிறார்கள். ஆனால் இந்த முறை கருத்துகள் புதியவை.

இன்னொரு சிறப்பு அங்கம் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது. அதை அங்கே வந்து
நேரில் பாருங்கள்.

இந்தாண்டு ஜமாலியன் விருது யாருக்கு என்று தெரியவில்லை. நிகழ்ச்சியில்
தெரியவரும்.

முக்கியமான செய்தி, இந்த விழா சரியாக இரண்டு மணி நேரம் மட்டும் தான். அதற்கு
மேல் ஒரு நிமிடம் கூட தாமதிக்காது என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன். காரணம்,
இவர்களின் உறுப்பினர்கள், தொண்டூழியர்களின் கட்டமைப்பு அப்படி. கடந்தாண்டு
இவர்கள் குழுபடம் எடுத்தவிதம் அதற்கு ஒரு சான்று. இரண்டே நிமிடத்தில்
ஆங்காங்கே நின்றிருந்த உறுப்பினர்கள் படபடவென ஒன்று சேர, ஒரே நிமிடத்தில்
படம் எடுக்க மீண்டும் அவர்கள் இடத்திற்கு அடுத்த சில வினாடிகளில் சென்று
விட்டனர். நான் பார்த்த வியந்த விஷயம்.

அன்றைய நிகழ்ச்சியின் நெறியாளர் திரு ஃபரீஜ் முஹம்மது. தமிழ்த்தாய் வாழ்த்து
பாடயிருப்பவர் செல்வி ஸ்நேஹா முரளி.

கடந்த இரண்டாடுகளாக தரமான நிகழ்ச்சியை கொடுத்த இவர்கள் இந்த முறையும்
சுவையான தமிழ் விருத்தளிப்பார்கள் என நம்பலாம்.

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

மெய்நிகர் உலகில் புத்தாக்கத் தமிழ்

தமிழ்மொழி விழாவின் ஒரு அங்கமாக வரும் 15-ஏப்ரல்- 2017, சனிக்கிழமை மதியம்
மணி 2:00 முதல் 5:00 வரை "மெய்நிகர் உலகில் புத்தாக்கத் தமிழ்" என்ற நிகழ்ச்சி
நடைபெறுகிறது.

இதை நடத்துபவர் திரு குணசேகரன். இவர் பிக்சிமிட் பிரைவேட் லிமிட்டட்
நிறுவனத்தின் இயக்குனர். இவருக்கு வேறு சில பரிமாணங்களும் உண்டு. நல்ல
பாடகர், இசையமைப்பாளர், தொழில் முனைவர் தொழில்நுட்ப ஆலோசகர் என
சொல்லிக்கொண்டே போகலாம். இவர் வசந்தம் ஒளிவழியில் நிறைய பாடல்கள்
பாடியுள்ளார். அன்மைக்காலத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசைக்கூடத்தில் இசை பயிற்சி
பெற்றார். பின்னர் லன்டன் சென்று இசை பயிற்சி பெற்றுக்கொண்டார். கடந்தாண்டு
தமிழ்பாடல் தொகுப்புக்கு இவரே இசையமைத்து, பாடிய ஒலிவட்டு ஒன்றை
வெளியிட்டார்.

சரி, மெய்நிகரென்றால் என்ன என்று பார்ப்போம். அதாங்க, Virtual Reality. அந்த
காலத்து மாயஜால படங்களில் வரும் காட்சி போல நீங்கள் ஒரு இடத்தில் இருந்து
கொண்டு பல இடங்களுக்கு சென்று வரும் அனுபவத்தை பெறலாம். இந்த பூத
கண்ணாடினு சொல்லுவாங்கள, அது மாதிரி ஒன்ன கண்ணில் மாட்டிக்கனும். இது
கண்ணாடியே பூதம் மாதிரி கொஞ்சம் பெருசா இருக்கும், நாம் போட்டால்
மற்றவர்ளுக்கும் பூதம் மாதிரி தெரியும்:) இதை மாட்டிட்டு ஒரு 'பட்டனை'
அமுக்கினால் போதும். ஒரு முப்பரிமாணக் காட்சி உங்கள் முன் ஓடும். நீங்க அந்த
இடத்திலேயே இருக்குற மாதிரி ஒரு உணர்வை கொடுக்கும். தலையை திருப்பினா
பின்னால் உள்ளதை பார்க்க முடியும். அது ஒரு அருவியாக இருக்கலாம்,
பனிமலையாக, விளையாட்டு அரங்கமாக, வின்வெளியாக இப்படி உண்மையான
இடங்களாவோ கற்பனை காட்சிக்களாவோ இருக்கலாம்.
சரி இதுல குணா என்ன பண்றார்னு கேக்குறீங்களா. இந்த 'கன்டென்ட்' எனப்படும்
காட்சி கருத்துகளை உருவாக்குவது எப்படி அதில் தமிழ் சார்ந்த காட்சிகளை,
விளையாட்டுகளை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக திருவள்ளுவர் நடந்த போகிற
மாதிரி ,அவரிடம் நாம் குறள் குறித்த விவரங்களை கேட்டறிவது மாதிரி ஒரு காட்சியை
உருவாக்கலாம்.

இப்படி, அன்றைய நிகழ்வில், தங்களுக்கு தோன்றும் கற்பனைகளை திட்டமாக
படைக்கவிருக்கிறார்கள் ஐந்து குழுக்கள். அதில் சிறந்த திட்டத்தை தேர்ந்தெடுத்து
அந்த குழுவை ஜெர்மனிக்கு அழைத்துச்சென்று திட்டத்தை செய்லபடுத்தும் நோக்கம்
குணாவுக்கு உள்ளது. கடந்த வாரம் இது தொடர்பான ஒரு பட்டறை நடந்தது. அதில்
சில பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இது முற்றிலும் ஒரு மாறுபட்ட நிகழ்ச்சி. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில்
பயன்படுத்தி தமிழ் சார்ந்த விளையாட்டு செயலிகளை எப்படி உருவாக்குவது என பல
விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், நம்முடைய உடல் அங்க
அசைவுகளுக்கேற்ப தமிழிசையை கேட்கும் ஒரு செயலியையும் காணலாம்.

குணசேகரன் பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல அதை
எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லித்தருவார். தொழில்நுட்பத்தில்
தமிழை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்.
நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து அதற்கான மானியங்கள்
பெற முடியுமா? அரசாங்க அமைப்புகளை எப்படி அனுகலாம்? என்பதும் அவருக்கு
அத்துபடி. அந்த முயற்சிகளை மற்றவர்களுக்கும் பகிர்ந்து மற்றவர்களும் பயனடைய
வேண்டும் என நினைப்பவர். கடந்த மூன்று ஆண்டுகளாக அவருடைய நிகழ்ச்சிக்கு
சென்றிருக்கிறேன். பயனுள்ள சில தகவல்களை பெற்றிருக்கிறேன்.

இந்த நிகழ்வும், அது போல பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். குறிப்பாக
மாணவர்களுக்கு தேவையான ஒரு நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி நடப்பது One North வட்டாரத்தின் உள்ளது. Circle Line MRTல் One
Northல் இறங்கி அங்கிருந்து 5 நிமிடம் நடக்க வேண்டும். பேருந்தில் வருபவர்கள் 191
எண்ணுள்ள பேருந்தில் அவர் வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடம், 10 Central
Exchange Green என்னும் இடத்தில் உள்ள Pixel Studio, Singapore 138649.
இடத்தை தவறவிட்டவர்கள் 96601051 என்ற எண்ணை நிகழ்ச்சி தொடங்குவதற்கு
முன் அவசியமானால் அழைக்கலாம்.

அனைவரும் வருக. ஆதரவு தருக. பயன்பெறுக.

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

;தமிழ் இலக்கியத்தில் அறிவியல்

இன்று மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் 'தமிழ்
இலக்கியத்தில் அறிவியல்' என்ற தலைப்பில் Semmal Manavai Mustafa
அவர்கள் உரையாற்ற இருக்கிறார். மருத்துவரான இவர் திருக்குறளில்
சொல்லப்பட்டிருக்கும் மருத்துவம் குறித்தும் பேசவிருக்கிறார்.
இவருடைய பேச்சில் நல்ல தகவல்கள் பல இருக்கும். அருமையான
பேச்சாளர். கேட்க தவறாதீர்கள்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் இவ்விழாவிற்கு
அனைவரும் வருக, ஆதரவு தருக.