பிளக்ஸ் பேனர்

சிங்கையில் புதியதாய் ஒரு அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. அது தமிழக தலைநகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இவர்களுடைய ஒரே நோக்கம் சிங்கையில் எப்படியாவது தமிழை வளர்த்துவிடுவது. சங்கம் வைத்து வளர்த்தார்கள் அன்று, இப்போது ‘பேனர்’ வைத்து வளர்க்கிறார்கள். உங்களுக்கு முகநூலில் ‘பிளக்ஸ் பேனர்’ வைக்க வேண்டுமா? அவர்களை அணுகவும். அணுகாவிட்டாலும், அனுமதி கொடுக்காவிட்டாலும் ‘பேனர்’ வைப்பார்கள். நீங்கள் இரசித்து பகிர்ந்து கொள்ளலாம்.

நீட் சோதனை அவலங்கள்

பள்ளியில் தயார்செய்யப்பட்டு
சமூகத்தின் கையில் புரட்டிப்பார்க்கப்பட
புதிய புத்தகத்தின் வாசனையாய்ப் புறப்படும்
வெள்ளைத்தாள்களின் தொடக்கத்தில்
சிவப்பு மையில் சோதனைக் கோடுகளைக் கீறல்களாய்க் கிறுக்கித்தள்ளி
மூன்றாம் துளையைத் திறந்துவிட்டு
மூச்சுக்குழாயின் வெப்பம் அதிகரிக்க
காதில் வெளிச்சம் பாய்ச்சி
இருளின் சத்தத்தைத் துளைத்தனுப்பி
நேர்மைப் பின்னல்களைப் பிரித்தெடுத்து
சந்தேகத்தைப் பிழிந்து சாறுத் தேய்த்து
மனத்தில் இரணங்களை விதைத்து
நுழைவாயிலிலேயே மனத்தேர்வு நடத்தித்
தயார் செய்வது நுழைவுத் தேர்விற்கல்ல
தவறாகத் தேர்தெடுத்த தலைவர்களை
அடுத்தமுறையாவது நினைவில் கொள்ள.

பேரீச்சம்பழம்

சீதா : ஏங்க இந்த பேரீச்சம்பழம் வாங்குனீங்க? போன தடவையே சொன்னேன்ல இதை வாங்காதீங்கனு…

நான்: அதை இப்ப சொல்றேயேமா. நான் இதை வாங்கிட்டு வந்து வீட்டில் வச்சு ஒரு மாசம் ஆச்சே. அன்னைக்கே சொல்லியிருந்தேனா மாத்தியிருப்பேன்ல…

சீதா: நான் இன்னைக்குதானே பார்க்குறேன்.

நான்: அது, உன் தப்பு. வாங்குனவுடனே பார்த்திருக்குணும்.

சீதா: அத அன்னைக்கே பார்த்துட்டேன்….உங்கள அதுக்கப்புறம் வீட்ல இன்னைக்குதான பார்க்குறேன்…

நான் :

#இனிமே_வாரயிறுதியில_ஒருநாளாவது_வீட்ல_இருக்ணும்

முகநூல் ஜோடி

முகநூலில் தங்களின் அடுத்த ஜோடி முதல் அடுத்த ஜென்மம் வரை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு ஜோசியம் சொல்லும் ஆப்(பு)களை திறந்து பார்த்து தங்கள் ஜாதகத்தை தாரை வார்த்தவர்களே கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா போன்ற ‘டேட்டா’ கொள்ளையர்களின் வாடிக்கையாளர்கள்