தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்

பக்தர்களுக்கு தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்🙏🙏🙏

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் …

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் …

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ …

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும்…

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா!

மேலே உள்ள வரிகள் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசத்தில் உள்ளது.

‘ஒரு நம்பி அப்பூதி’ என்ற இசை நாடகம் இன்று அருள்மிகு ஶ்ரீ ருத்ரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஆலயம் நிர்வாகமும், திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரும் இணைந்து நடத்தும் இந்நாடகம் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அப்பூதி அடிகளின் கதையை கருவாக கொண்டது. திரு அ கி வரதராஜன் ஐயாவின் பெருமுயற்சியில் திருமுறை மாநாட்டு குழுவினருடன் இணைந்து அரங்கேறும் நான்காவது நாடகம். கடந்தாண்டு திலகவதியார்’ நாட்டிய நாடகம் அரங்கேறியது நமக்கு நினைவிருக்கலாம். குறைந்தபட்ச வசதியை வைத்து சிறந்த ஒரு நாடகத்தை படைத்த பெருமை திருமுறை குழுவினரை சாரும். இதில் நடித்தவர்களும் யாரும் தொழில்முறை நடிகரல்ல. அவர்கள் திருமுறை மாநாட்டுக் குழுவில் உள்ளவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் தான். அதேபோல் இந்தாண்டும் சிறப்பானதொரு நாடகத்தை அரங்கேற்ற பல ஒத்திகைகள் முடித்து தயாராக இருக்கின்றனர் இக்குழுவினர். இந்த இசை நாடகத்துக்கான எல்லா பாடல்களையும் அறுசீர் விருத்தம் என்ற மரபில் எழுதியுள்ளார் ‘வெண்பா கவிஞர்’ அ கி வரதராஜன். வெண்பா எழுதுவதில் வித்தகரான அ கி வரதராஜன் ஐயா தன்னுடைய ஒவ்வொரு நிகழ்வுக்கும் வெண்பா எழுதி வரவேற்பார். கடந்தாண்டு சிங்கப்பூர் இலக்கிய விருது நிகழ்வில் தன்னுடைய இரண்டு நூல்களுக்கு பாராட்டுப் பரிசு பெற்றது குறிப்பிடதக்கது. இந்நாடகத்தில் அப்பூதி அடிகளாரின் சைவப்பற்று, திருநாவுக்கரசர் மேல் அவர் வைத்திருந்த அன்பு, மரியாதை, அதை அவர் வெளிப்படுத்திய விதம், தன் மகன் இறந்தது தெரிந்தும் விருந்து படைத்த பக்தி போன்ற காட்சிகள் இசையோடு நம்மை மெய்மறக்கச் செய்ய காத்திருக்கின்றன. உங்கள் குழுந்தைகளோடு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய நாடகம். அனைவரும் வருக! ஆதரவு தருக! நாள் : 22-07-2017(இன்று), சனிக்கிழமை நேரம் : மணி 6:00 இடம் : அருள்மிகு ஶ்ரீ ருத்ரகாளி அம்மன் ஆலயத் திருமண மண்டபம். 100 டிப்போ சாலை.

ஶ்ரீ வடபத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. குடமுழுக்கின் போது கருடன் சுற்றி வந்தது சிறப்பு. ஏற்பாட்டாளர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் நன்றி

முருகன் பாடல்

ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்.

பொருள்: முருகனின் பரந்த தோள்கள் பன்னிரண்டும் வாழ்க. ஆறுமுகமும், மலையைப் பிளக்கும் சிறந்த வேலும் வாழ்க. சேவலும், அவன் வலம் வரும் மயிலும் வாழ்க. தெய்வானையும், வள்ளியும் வாழ்வார்களாக. அடியவர்களும் நல்வாழ்வு வாழட்டும்.
குறிப்பு: கச்சியப்பர் பாடியது.

Ref: http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp…

முருகன் பாடல் ரிலீஸ் சி டீ

Saturday, January 9, 2016 at 8:49pm UTC+08

முருகனின் திருவருளால், நான் எழுதிய முதல் பாடல் அதுவும் முருகன் பக்திப் பாடல் ஒலிவட்டாக வெளிவரவயிருக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தன்னுடைய ‘காவடியாம் காவடி’ பக்தி பாடல் தொகுப்பின் தலைப்புப் பாடலை, மெட்டுக் கொடுத்து எழுத வாய்ப்புக் கொடுத்த நண்பர் பரசுவிற்கு என் நன்றி! ஒலிவட்டு வெளியீடு, வரும் சனிக்கிழமை, 16-சனவரி-2016, காலை 9:30-12:30 மணிக்கு, சிங்கப்பூர், டேங்க் ரோடு, அருள்மிகு தெண்டாயுதாணி கோயில் மண்டபத்தில் நடைபெறும். அனைவரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

I am happy to announce that with the Blessings of Lord Murugan, the first song I penned that too a devotional song on Lord Murugan is getting released as CD I Thank Parasu for providing me the opportunity to write the Title Song matching his tune for his new devotional Album ‘Kavidayam Kavadi’ The CD release function will be held on 16-Jan-16, Saturday, 9:30-12:30 at Sri Thendayathupani Temple auditorium, Tank Road, Singapore. Please do join us and grace the occasion.