1980களில் திரைப்படப் பாடல்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கண்ணதாசன், வாலி, வைரமுத்து. அந்த காலகட்டத்தில் எழுதிய அனைத்து பாடல்களும் பெரும்பாலும் இவர்களில் யாரோ ஒருவர் தான் எழுதியுள்ளார் என்றே நினைப்பார்கள். இவர்களைத் தாண்டி பல கவிஞர்கள் இருந்துள்ளனர். அவர்களில் தங்களை கவிஞர்கள் என்று கூறிக்கொள்ளாத மூன்று முக்கியமான கவிஞர்களை பற்றி அருமையாக ஆராய்ச்சி செய்து “இசைப்பாட்டு இலக்கியம்” என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் நம் கவிஞர் கி கோவிந்தராசு. சிறுவயதில் இருந்தே திரைப்படப் பாடல்களையும் அதன் வரிகளில் பொதிந்திருக்கும் பொருளையும் (பெரும்பாலான பாடல்களில்) கூர்ந்து கவனித்து அதன் தாக்கத்தால் கவிஞராகி மாணவ பருவத்திலேயே வைரமுத்து கரங்களால் ‘மாண்கவி’ பட்டம் பெற்றார் கவிஞர் கி கோவிந்தராசு. அது மட்டுமா சங்க இலக்கியத்தையும், திருக்குறளையும், கம்பராமாயணத்தையும் கற்று தேர்ந்த இவருக்கு மலேசியாவின் சிரம்பான் கம்பன் கழகம் 2015ம் ஆண்டு “கம்பன் விருது” வழங்கி சிறப்பித்தது. இத்தைகைய சிறப்பினை பெற்ற இவர் அந்த மூன்று கவிஞர்களின் திரையிசைப் பாடல்களில் உள்ள இலக்கணம், இலக்கிய சுவைகளை திருவள்ளுவர், கம்பர், கண்ணதாசன், வைரமுத்து துணைக்கொண்டு அழகாக ஒப்பிட்டு , விளக்கங்களுடனும் மிக எளிமையாக இப்புத்தகத்தில் பதிந்துள்ளார். சினிமா பாடல்களை இரசிக்கும் அனைவரும் இந்நூலை வாசித்தால் சிறந்த நூறு பாடல்களை புரிந்து இரசித்துக் கேட்ட அனுபவத்தை பெறுவர். இந்நூலை வரும் மார்ச் 19ம் தேதி மாலை ஆறு மணிக்கு விக்டோரியா தெருவில் உள்ள தேசிய நூலக வாரியம் கட்டடத்தில், ஐந்தாம் தளத்தில் நடக்கும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் வாங்கலாம். புத்தகத்தை வாங்குமுன் ஒரு சிறிய விளையாட்டு…:) கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல்களை யார் எழுதியது என்று யூடுயூப்பிலோ கூகுளிலோ பார்க்காமல் கண்டுபிடியுங்ஙள் பார்க்கலாம். 1. “அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே….” 2. “சிறுபொன்மனி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் இருகண்மணி பொன் இமைகளில் தாளலயம்…” 3. “கதிரவனைப் பார்த்து காலைவிடும் தூது வண்டுகளைப் பார்த்துப் பூக்கள்விடும் தூது —-” 4. “உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…” 5. “மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையைத் தூது விட்டேன்…” 6. “கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண்வரைந்த ஓவியமோ….”
மீள்பார்வை
பாபநாசம் அட்டகாசம்
த்ருஷ்யம் படமோ, விமர்சனமோ, கதையோ பார்க்காததால், முழுவதுமாக இரசிக்க முடிந்தது! நெல்லை மண் சொந்தம் என்பதால் கூடுதலாக இரசிக்க முடிந்தது.
எனக்கு பிடித்த நடிகைகளில் கௌவுதமியும் ஒருவர் ஆனால் முதலில் சில காட்சிகளில் கொஞ்சம் சொதப்பல்ஸ்.
த்ருஷ்யம் மாதிரி இல்லையே என்று சொல்பவர்களுக்கு: ஐபோன் பிடித்தவர்களுக்கு சாம்சங் பிடிப்பதில்லை, அப்படித்தான்! ஆனால் கமல், கமல் தான்👍! கமல் அண்ணாச்சி அசத்தி புட்டீயளே!
பி.கு: சென்னை தமிழ், கொங்கு தமிழ், மதுரை தமிழ், இலங்கை தமிழ், இதனுடன் மற்ற மொழிகளான மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகியவற்றுடன் கலந்த தமிழ் இப்படி பல தமிழை பேசி நடித்த கமல், தான் விட்டு வைத்த நெல்லை தமிழையும் இப்போது பேசி முத்திரை பதித்து தன் நடிப்புத் திறனை மீண்டும் நிரூபித்திருக்கிறார்!