#தமிழ்மொழி_விழா_2016 ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது இன்று ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய தமிழ் மொழி விழா. ஏன்? மூன்று முக்கியக் காரணங்கள்: 1. சரியாக இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடம் : எந்த ஒரு நிகழ்ச்சியும் இரண்டு மணி நேரத்துக்குள் இருந்தால் மிகச் சிறப்பு. அதுவும் குறித்த நேரத்தில் ஆரம்பித்து, குறித்த நேரத்தில் முடித்தது. 2. சிறப்பு விருந்தினர், சிறப்புப் பேச்சாளர், விருதாளர் தவிர மற்றவர்கள் யாருக்கும் பொன்னாடை இல்லை: முக்கியமாக புரவலர்களுக்கு பொன்னாடை இல்லை. அவர்களிடம் நன்கொடை வாங்கி அவர்களுக்கே செலவு செய்வது எனக்கு ஏற்புடையதல்ல. அவர்களுக்கு மரியாதை செய்வது அவசியம். அதற்காக பொன்னாடைகள், மேடைக்கு அழைப்பது என்ற சடங்கு, சம்பிரதாயங்கள் இல்லாமல் நேரம் சேமிக்கப்பட்டது. 3. கூட்டம் அதிகமாக வரும் என முன்னரே திட்டமிட்டு வெளியே பெரிய திரையிட்டு, நாற்காலி போட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது சிறப்பு: வேறு பெரிய இடமாக முதலிலேயே தேர்ந்தெடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. மிக முக்கியமாக, திரு கோபிநாத் அவர்களின் இடைவிடாத தடையில்லாத கருத்தாழமிக்க அதே சமயத்தில் நகைச்சுவையுடன் கூடிய பேச்சு நான் சமீபத்தில் கேட்ட பேச்சுகளில் மிக சிறந்தது.