தமிழர் பாரம்பரிய உணவும் ஆரோக்கியமும்

 எச்சரிக்கை: கண்டிப்பாக முதல் பகுதியை படிக்கவும். இரண்டு பகுதியையும் பொறுமையாக உள்வாங்கி படிக்க 4 நிமிடமும் 40 நொடிகளாகும். மேலோட்டமாக படிக்க 2 நிமுடமும் 38 நொடிகளாகும். படிக்காமல் வாழ்த்துகள் மட்டும் போட 18 வினாடிகளாகும். படிக்காமல் வெறும் ‘லைக்’ மட்டும் போட ஒரு வினாடி ஆகும். படித்துவிட்டு ‘லைக்’ போடாமல் போனால் பல மணி நேரம் வருத்தப்பட வேண்டியிருக்கும் .

முதல் பகுதி
——————–

“பேலியோ உணவு முறைக்கு மாற போறேன்”,னு சொன்னதும்
“என்னது போலியோவா”னு என் மனைவி சீத்தா  கேட்க,
“இல்லம்மா, இது ஒரு உணவு முறை. இத கடைபிடிக்கறவங்க சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் இப்படி எதுவும் சாப்பிடக்கூடாது”
“அப்புறம், என்ன இலை, தழையவா சாப்பிடனும்”
“இல்ல, தினமும் காலைல 100 பாதாம்பருப்பு அப்புறம், பட்டர் டீ…”
“இங்க பாருங்க, என் உயிர வாங்காம, ஒழங்கா போடுறத சாப்பிட்டு, அமைதியா போயிடுங்க…”

மேலும் படிக்க…

தமிழ் விக்கிபீடியா

என்னுடைய பேராசிரியர் ஒருமுறை சொன்னார், ஒப்படைப்புகளுக்கு (assignments) ‘விக்கிபீடியா'(Wikipedia) தரவுகளை விவரப்பட்டியலில்(References) சேர்க்கக்கூடாதென்று. பெரும்பாலான பல்கலைக்கழங்களில் அது ஏற்றுக்கொள்ள படமாட்டாது. இதற்கு காரணம் Wikipediaவில் உள்ள தரவுகள்/உள்ளீடுகள் போதிய அளவு சரிபார்க்கப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அதில் பதிவேற்றம் செய்யலாம். இப்போது எப்படி என்று தெரியவில்லை. இது ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழ் விக்கிபீடியாவின் தரம் மேம்பட்டது. அதில் எப்படி பதிவேற்றம் செய்கிறார்கள், அது எப்படி சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பது 2015ல் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இதற்கென நடந்த அமர்வில் இதன் நிர்வாகிகள்/ஒருங்கிணைப்பாளர்கள் விளக்கினார்கள். நான், திண்ணப்பன் ஐயா, பேராசியர் மு இளங்கோவன் இன்னும் சிலர் இதில் கலந்துகொண்டோம். அது மட்டுமல்ல, இதில் பதிவேற்றம் செய்பவர்கள் பொரும்பாலும் தமிழ் நன்கு தெரிந்த, கற்றுத்தேர்ந்த தமிழ் ஆசான்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள். எனக்கு தெரிந்து இதில் பெரும் பங்காற்றியிருப்பவர் பேராசிரியர் மெய்கண்டான் ஐயா அவர்கள். திருக்குறளின் பரிமேலழகர் உரையினை முழுவதுமாக பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில் திருக்குறளை யாப்பு வடிவில் மட்டுமில்லாமல் சொற்களாக எளிதில் மாணவர்களுக்கும் புரியும்படி எழுதியிருக்கிறார் மெய்கண்டான் ஐயா(சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). இவர் பல சங்க இலக்கிய நூல்களை, பாரதிதாசன் பாடல்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவேற்றங்களை செய்துள்ளார். ‘விக்கிமூலம்’ பக்கத்தில் அதை நீங்கள் பார்க்கலாம். இவர் பங்கேற்பை சிறப்பு செய்யும் வகையில் இவருக்கு ‘களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்’ கொடுத்திருக்கின்றனர் விக்கி அன்பு குழுமத்தினர். இவருடைய பதிவேற்றங்களை பயன்படுத்தும் ஆய்வாளர்கள் பலர் உள்ளனர். இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் தமிழ் விக்கிபீடியா நம்பத்தகுந்தது, அதில் மாணவர்களுக்கு தேவையான பல வளங்கள் உள்ளன, அதை தைரியமாக பயன்படுத்தலாம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே.

மேலும் படிக்க…

பட்டிமன்றம்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும்
கீட் ஹாங் சமூக இந்திய நற்பணிச் செயற்குழுவும் இணைந்து நடத்திய சிறப்பு பட்டிமன்றம் கடந்த சனிக்கிழமை, 08-ஏப்ரல்-2017, அன்று மாலை கீட் ஹாங் சமூக மன்றத்தில் சிறப்பாக நடந்தது.

“வாழ்க தமிழ்மொழி” என்ற பாரதியார் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக ஒலிக்க நிகழ்ச்சி தொடங்கியது.

அடுத்ததாக, செல்வி கயல்விழி மதிவாணன் சிறப்பாக பரதம் ஆடினார். இதை நன்கு கவனித்து அவரையும் அவரின் பெற்றோர்களின் பாராட்டிய பிறகே பட்டுமன்றத்தை தொடங்கினார் திரு பாக்கியராஜ்.

பட்டிமன்ற கலைக்கழகத்தின் தலைவர் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் வரவேற்புரை வழங்கினார்.

பேச்சாளர்களுக்கும், புரவலர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

இந்த பட்டிமன்றத்துக்கு நான் முதல்ல போற மாதிரி திட்டம் ஏதும் இல்லை. அதே நேரம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில நடக்கவிருந்த “சிவகாமியின் சபதம்” நாடகத்துக்கு வருவதாக அவர்களுடைய முகநூல் ‘நிகழ்வு பக்கத்தில்’ சொல்லியிருந்தேன். ஒரு வாரம் முன்னதாகத்தான் அதை மாத்தி பட்டிமன்றத்துக்கு செல்ல முடிவெடுத்தேன். அதற்கு ஒரு காரணம் திருமதி அகிலாவும், திரு மன்னை ஐயாவும். மற்றொரு காரணம், கடந்த சில ஆண்டுகளாக பட்டிமன்ற கலைக்கழகத்தின் பட்டிமன்றங்களை முடிந்த வரை தொடர்ந்து கேட்டு வருகிறேன். 90க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை மேடை ஏற்றிய பெருமை இவர்களுக்குண்டு.

மேலும் படிக்க…

திருக்குறள் விழா 2017

ஏப்ரல் 1ஆம் தேதி சரியாக மாலை மணி 6க்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் 31வது ‘திருக்குறள் விழா 2017’, “வாழ்க தமிழ்மொழி” என்ற தமிழ் வாழ்த்தோடு தொடங்கியது. பாரதியாரின் இப்பாடலை ஸ்வப்னா ஆனந்த் தனது இனிமையான குரலில் பாடினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடந்த திருக்குறள் விழா போட்டிகள் குறித்த ஒரு காணொளி போட்டுக் காண்பிக்கப்பட்டது.
பாலர் பள்ளி முதல் உயர்நிலை பள்ளி வரை சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியை நடத்திய விதம், பங்குபெற்றவர்கள், பொற்றோர்களின் கருத்து ஆகியவை பகிர்ந்து கொள்ளப்பட்டன.

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிறையவே சொல்ல விரும்பினார். தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்படும் வேலை குறைப்பு, தண்ணீரின் அவசியம், தமிழர்களின் ஜனத்தொகை, பொருளாதாரம், அரசியல் ஈடுபாடு இப்படி நிறைய சொன்னார். ஆனால் அதை இன்னுமசிறப்பாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு மட்டும் தானோ? ஏனோ நான் எதிர்பார்த்த வழக்கமான பேச்சு அன்றில்லை.

மேலும் படிக்க…

மாணவர்களுக்கு தமிழ் பயிற்சி

தொடக்கநிலை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நேரம் முடிந்த பிறகு தமிழ் பயிற்சி அளிக்கவும், தமிழ் வீட்டுப்பாடத்தில் உதவி செய்யவும் தொண்டீழியர்கள் தேவை.

தொண்டூழியர்களுக்கு சிங்கை கல்வி அமைச்சின் பாடத்திட்டதில் நல்ல அறிமுகமும், தமிழில் புலமையும், மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில் ஆர்வமும் இருக்க வேண்டும்.

வாரநாள்களில் ஒரு நாள்(எந்த நாள் என்பதை பிறகு தேர்வு செய்யலாம்), மதியம் மணி 2:00லிருந்து 3:30 வரை, ஒன்றரை மணி நேரம், இந்த கல்வியாண்டு முடியும் வரை கீழ்கண்ட பள்ளிக்கு சென்று பணியாற்ற வேண்டும்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்வி அமைச்சின் பாடத்திட்டம் பழக்கப்பட்டவர்கள், தமிழ் தெரிந்த ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு தெரிந்தவர்களையும் பரிந்துரைக்கலாம்.

இடம் :
1.MayFlower Primary School
200, Ang Mo Kio 5,
Singapore 569878

2.Blangah Rise Primary School
91, Telok Blangah Heights,
Singapore 109100.