நேரிசை ஆசிரியப்பா

#SG50_தமிழ்மரபு #மரபுப்பாடல்

நேரிசை ஆசிரியப்பா!

நாடு உயர நைந்தே நம்மவர்
பாடு பட்டு பாங்காய் உழைத்தனர்
ஆட்சி கட்டிலில் அமர்ந்தது தமிழும்
மாட்சி பொருந்திய மகனார் முடிவால்
உற்ற மொழியை ஓதிட தயங்கோம்
மற்ற மொழிகளை மதித்து நடப்போம்
நல்வழி காட்டும் நம்மொழி தானே
சொல்லி கொடுக்கும் சுவையுடன் நெறியை
மொழியுடன் உறவு முறியா வண்ணம்
தொழிலுடன் அதனை தொடர்ந்து பயில்வோம்
செம்மொழி காக்கும் சிங்கை
நம்மவர் வாழ்வில் நாளும் உயர்வே!

சாலைக் காவல்

#SG50_தமிழ்மரபு #மரபுப்பாடல்

எண்சீர் விருத்தம்!

சாலைக் காவல்!

விரிந்திருக்கும் சாலைகளின் அகலம் கண்டால்
விமானங்கள் கூட;இங்கு தரையி றங்கும்
வரிசையாகச் செல்லுகின்ற வாக னங்கள்
வடிவத்தில் தண்டவாள ரயிலை ஒக்கும்
வரிபிடிக்கும் வசூல்காரன் சாலை மேலே
வழித்தடத்தில் தவறிழைத்தால் அறிக்கை ஈயும்
சரியாக விதிமுறைகள் கடைப்பி டிக்க
சாலைகளில் படக்கருவி காவல் செய்யும்

காதல் தினம்

கவிதையில் மட்டுமே தொடுவாய் எனில்! அதன் வரிகளாய் என்னை படைத்துவிடு! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!
கதைகளில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனையே! ஆனால் என் கற்பனையில் வரும் சம்பவங்களும், நீயும் நிஜமே! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!
தோற்பதும் சுகமே உன்னுடன் காதல் விளையாட்டில்! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!
உன்னை பார்த்த குற்றத்திற்காகவா என்னை மனச்சிறையில் அடைத்து வைத்தாய் ஆயுட்கைதியாக! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்

காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்! 2

தொலைவிலிருந்தும் என் அருகில் தெரிந்தாய்! உரிமையோடு என் உயிரைத் தொட்டாய்! அழகாய் பேசி அழுத்தம் குறைத்தாய்!உன் ஒற்றை சொல்லில் மாற்றம் செய்தாய்! கன்னிப் பேச்சில் கவிஞனாக்கினாய்! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!

காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!

எப்படி புரண்டு படுத்தாலும் என் தூக்கத்தை புரட்டி போடுகிறது உன் நினைவுகள்! இமைகள் மூடினேன் காட்சிகள் அகலவில்லை! தூங்க எண்ணினேன் எண்ணங்கள் விடவில்லை! கட்டிலின்மேல் கிடந்தேன் கனவுகள் வேலையில்லா பட்டதாரியானது! பொழுது புலர்ந்தது படுக்கை பிடிக்கவில்லை! உறங்கினால் தானே விழிப்பதற்கு, உன் முப்பரிமான நிழல் முன்னே ஊஞ்சாலடியது! தூக்கம் தொலைந்து போனது! தாக்கம் எஞ்சி நின்றது! ஏக்கம் ஏனோ கொன்றது! என்னை மீட்க உன்னை தேடுகின்றேன்! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!