ஐஃபோன் அலார்ம் அடித்து எழுந்தாலும்
தினமும் இந்த கொண்டைச் சேவல் கூவும் ஓசை கேக்கும் பொழுது தான் ஒரு உற்சாகம் பிறக்கும். இன்று காலை அதன் ஜோடியுடன் படம் பிடிக்க முயன்ற போது வெட்கப்பட்டு ஓடி ஒளிய எத்தனித்து இந்த விஐபி ஜோடி.
கவிதைகள்
சிங்கை பவன்
சிங்கை பொன்விழாவை ஒட்டி எழுதிய மரபுக்கவிதைகளில் ஒன்று இன்றைய தமிழ் முரசில்!
‘சிங்கை பவன்’ என்ற இந்த கவிதை சமநிலைச் சிந்து மரபு வகையைச் சார்ந்தது!
அச்சுப் பிழை : முதல் கண்ணியின் கடைசி அடியில் ‘அன்னபூரணி அவள்தானே’ என்று எழுதியிருந்தது ‘அன்ன முழு அவள்தானே’ என்று பிழையாக அச்சாகியுள்ளது. மன்னிக்கவும்!
நன்றி தமிழ் முரசு, ஆசான் Karuna Karasu Govinda Raj Panasai Natarajan
Raju Ramesh மற்றும் ‘மரபு மட்டும்’ நண்பர்கள் குழு
கொலு பொம்மை
அப்பா தொலைக்காட்சி
செய்தியிலே லயித்துப் போக
அம்மா சாமியிடம் மணி
அடித்து வரம் வேண்ட
மனைவி பணிப்பெண்னுடன்
பட்டிமன்றம் நடத்த
மகன் கைப்பேசியோடு
கட்டிப் புரள
மகள் கார்ட்டூன்களுடன்
தனிக் குடித்தனம் பண்ண
வீட்டுத் தொலைப்பேசி தொந்தரவாய்
தொடர்ந்து ஒலிக்க
முகநூலில் முழுவதுமாய்
மூழ்கிப் போனான்
குடும்ப தலைவன்!
அலங்காரமாய் அவனுமுள்ளான்
வரவேற்பு அறையினிலே!
ஏதுமறியா கொலு பொம்மையைப் போல்!
சமநிலைச் சிந்து!
#SG50_தமிழ்மரபு #மரபுப்பாடல்
(இது சிறுவர்களுக்கும் புரியும்படி எளிய சொற்களைக் கொண்டு மரபு கவிதையில் ஒரு சின்ன முயற்சி)
சிங்கை பவன்!
உண்ண உணவு சிங்கையிலே – எல்லாம்
உடனே கிடைக்கும் அருகினிலே
என்ன வகைகள் என்றாலும் – அதில்
எத்தனை சுவைகள் கேட்டாலும்
சின்ன கடைகள் ஆனாலும் – பெரிய
சீமான் விடுதி போனாலும்
அன்ன பூரணி அவள்தானே – நம்
அனைவரின் பசியும் போக்குவதால்
வித்தை எதுவும் செய்யவில்லை – எந்த
விளைச்சல் இல்லா நிலமெனினும்
அத்தனை நாட்டு உணவுமிங்கே – என்றும்
அனைத்து இடத்தும் கிடைக்குமிங்கே
சுத்தமாய் சோதனை செய்தபின்னே – நற்
சுகாதா ரசான்றும் கொடுத்தபின்னே
மொத்த பொருளும் தீவினிலே – நல்
முத்திரை யுடன்விற் கப்படுதே
பத்திய சாப்பா டானாலும் – மிக
பலமாய் உண்ண கேட்டாலும்
சத்தான உணவு உண்ணுவதால் – இங்கே
சராசரி வயது எம்பதாச்சு
புத்தம் புதுநோய் வராவண்ணம் – என்றும்
போதுமாய் சட்டம் கொண்டுவந்து
அத்தனை பாதிப் புற்றபுலால் – வரவு
அனைத்தும் தடைகள் செய்திடுமே
ஹாக்கர் செண்டர் கடைகளிலே – நல்ல
ஹலால் உணவுடன் சைவமுண்டு
பாக்குற எல்லா பண்டமுமே – மிக
பரிசுத் தமாய் சமைப்பதுண்டு
விக்குற அத்தனை உணவுகளும் – நமக்கு
விலையும் மலிவாய் கிடைப்துண்டு
கேக்குற அளவு கொடுப்பதினால் – நம்
கொள்ளும் வயிறு நிறைவதுண்டு
பிரபல கோழிச் சோறுமுண்டு – நமக்கு
பிடித்த லக்சா மீகோரிங்
நிறைந்த மீன்கறி தலையுடனே – ரொம்ப
நல்ல சார்கோவ் தியோவுமுண்டு
கார நண்டும் ருசித்திடலாம் – கடையில்
காயா டோஸ்ட்டும் சுவைத்திடலாம்
தரமுடன் விருந்தும் தித்திக்கும் – சீன
திம்சம் பரிமா றும்போது
பல்வகை பிரியா ணிதேக்காவில் – மற்றும்
பலவகை உண்டு பரோட்டாவில்
சில்லென செண்டோல் பானமுமே – இனிக்கும்
சீனி மைலோ டைனோசரும்
பல்லில் பட்டால் கூசிடுமே – இருந்தும்
பதமாய் சுகமும் அளித்திடுமே
உள்ளம் கொள்ளை போய்விடுமே – நம்ம
உயர்ந்த சிங்கை உணவிடமே
அறுசீர் விருத்தம்
அறுசீர் விருத்தம்!
வீடமைப்பு பேட்டை! (நேற்றைய தொடர்ச்சி)
அறைகளிங்கு வசதி சேர்க்க
அழகழகாய்க் குடிய மர்ந்தோம்
குறைகளின்றி நிதமும் வாழ
குறைவில்லா நீரும் கொண்டோம்
தரைமுதலாய் தளம்வ ரையில்
தடையிலாமின் சாரம் கண்டோம்
இறைவனைப்போல் கண்ணில் காணா
இழையிலிணை யம்;இ ணைந்தோம். (2)
பலவண்ண ஆடை கட்டி
பளிச்சென்று காட்சி தந்தாள்
சலவைசெய்த துணிகள் அங்கே
சன்னலிலே காயும் போது
மலைபோல உயர்ந்த வீடும்
மனங்கவரும் பசுஞ்சோ லையும்
பளபளக்கும் வண்ணத் தோடு
பாங்காக மிளிரும் பேட்டை (3)