கிழமைக் கவிதை

ஞாயிறு போதை தெளிவதற்குள்
திங்’கள்’ வந்து விட்டதே..
திங்கத்தானே இந்தப் போராட்டம்
தொழிலுக்கு போய்த் தொலைவோம்
‘சனி’ விட்டால் ஞாயிறு தானே…!!

நாளை செவ்’வாய்’யுடன் சந்திக்கிறேன்….!!

இப்படிக்கு,
வணக்கக் கவிதைகள், கிழமைக் கவிதைகள், தத்துவங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஒரு முகநூல் ‘குடி’யானவனின் உளறல்…😁😁

அம்மாவின்_தீபாவளி

(இன்னிசை பஃறொடை வெண்பா)

விடியுமுன் கண்விழித்து வேலை முடித்து
துடிப்பான பிள்ளைகளின் தூக்கம் கலைத்து
வடிவான மன்னவனை வாவென் றழைத்து
பிடிவாத வாண்டை பிடித்தெண்ணெய் தேய்த்து
மடித்தபுத்தா டைகளில் மஞ்சளும் வைத்து
படிப்படியாய் பல்சுவைப் பண்டம் படைத்து
முடிநரைத்த மூத்தோரின் முத்தாசி பெற்று
வெடிகளும் மத்தாப்பும் வீதியில் மின்ன
நெடியசுற் றத்தார் நெகிழ்ந்துகொண் டாட
புடிகையிலெ டுத்த புதுத்துணியு டுத்த
அடியோ(டு) அவள்மறந்தா ளே!

*புடிகை = ஏலம்

அம்மாவின்_தீபாவளி

(இன்னிசை பஃறொடை வெண்பா)

விடியுமுன் கண்விழித்து வேலை முடித்து துடிப்பான பிள்ளைகளின் தூக்கம் கலைத்து வடிவான மன்னவனை வாவென் றழைத்து பிடிவாத வாண்டை பிடித்தெண்ணெய் தேய்த்து மடித்தபுத்தா டைகளில் மஞ்சளும் வைத்து படிப்படியாய் பல்சுவைப் பண்டம் படைத்து முடிநரைத்த மூத்தோரின் முத்தாசி பெற்று வெடிகளும் மத்தாப்பும் வீதியில் மின்ன நெடியசுற் றத்தார் நெகிழ்ந்துகொண் டாட புடிகையிலெ டுத்த புதுத்துணியு டுத்த அடியோ(டு) அவள்மறந்தா ளே! *புடிகை = ஏலம் #தீபாவளி_சிறப்பு_கவிதை

காத்துக்கிடத்தல்

காதலியைக் காண
கல்லூரி முடியும்
வேளைக்காக

மனம்விட்டுப் பேச
நண்பனின்
வருகைக்காக

வெளியூரில் படிக்கையில்
அப்பா தரும்
பணத்திற்காக

அன்பால் உருகும்
அம்மாவின்
கடிதத்திற்காக

புத்தாடையுடுத்த
பண்டிகைநாள்
விடியலுக்காக

பிடித்த நடிகரின்
புதிய
படத்திற்காக

விழாக்களில் மட்டுமே
கூடும்
சொந்தங்களுக்காக

தொடர்கதையின் முடிச்சினை
அறிந்திட
அடுத்த இதழுக்காக

பொருட்காட்சியின் பெரிய
இராட்டினத்தில்
சுத்துவதற்காக

ஆடிக்கொருமுறை
உணவகத்தில்
சாப்பிடுவதற்காக

என இத்தனை
காத்திருத்தலும்
கொடுத்த
இன்பம் கிடைக்குமா
என்
அடுத்த தலைமுறைக்கு?

அம்மாவின் கடவுள்

கடிகார முள்ளை
மனத்தில் நகர்த்தி
நயனத்தின் ஓரத்தில்
ஏக்கத்தைத் தேக்கி
எண்ணத்தின் நடுவில்
நினைவுகளை நிறுத்தி
வேலைமுடிந்து வீடுவரும்
அம்மாக்களுக்கு,
மதங்களைக் கடந்த
கடவுள்,

எப்போதும் எண்ணிக்
கொண்டிருப்பதால்

பத்திரமாய்ப் பிள்ளைகளைப்
பார்த்துக் கொள்ளும்
பணிப் பெண்களே!