போலி

 

பூசிய சாயம்
வாசனை திரவியம்
வீசிய புன்னகை
பேசிய சொற்றொடர்
கூறிய வாழ்த்துகள்
வடித்திட்ட கவிதைகள்
சொல்லிய கதைகள்
தெரிவித்த கருத்து
சிந்திய கண்ணீர்
பகிர்ந்திட்ட பதிவுகள்
எழுதிய பின்னூட்டம்
அரவணைத்த அன்பு
காட்டிய பரிவு
வாட்டிய பிரிவு
எதிலும் புரியாதது
விட்டு விலகியபோது விளங்கியது!!

நாளை நமோ நாட்டுமக்களுக்கு உரை

புத்தாண்டு 
—————-

“வெற்றி! வெற்றி!” என
ஒலிபெருக்கியில் முழங்குவார்
பல புள்ளி விவரங்கள்
அள்ளிக் கொட்டுவார்
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம் நடந்தது என்பார்
புத்தாண்டில் புது பாரதம்
பிறந்தது என அறிவிப்பார்!

கேட்ட கேள்விகளுக்கு
பதில் சொல்ல மாட்டார்
எதிர்கட்சியினரை
எள்ளி நகையாடுவார்
கறுப்பெல்லாம் வெள்ளையானதென
கட்டுக் கதை கட்டுவார்
பஞ்சு டயலாக்கு பல
பளிச்சுனு எடுத்து விடுவார்!

பக்தாள்ஸ் எல்லாரும்
பல்லிளித்து கைத்தட்டுவர்
வாட்ஸப்பில் நம் காசில்
விளம்பரம் செய்வர்
ஊடகத்தில் உண்மை தவிர
மீதி எல்லாம் உளறுவர்
பல பொருளாதர மேதைகள்
புதுசாய் கிளம்புவர்!

தூரம்

அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
செய்தி கேட்டு கிளம்பியவரை
கட்டிப்பிடித்த மகளிடம்
சாமி பார்க்க போவதாகச்
சொன்னார் அப்பா.

கோயில் பூக்கடையின் அந்த
ரோசாப் பூமாலை
துக்கவீட்டு திருவாளருக்கு
சாத்தப்படுவது பாதி
மொய்த்த வண்டுகளுக்கு தெரியாது.

அசையாத சிலைக்கு
அபிஷேகமும் அலங்காரமும்
சுற்றம் சூழ
கனத்த மௌனத்துடன்
நடந்தேறியது.

மாலையிட்டு
கட்டிய பாதம் தொட்டு
கையெடுத்து கும்பிட்டு
அழுகையுடன் பார்த்தார்
புன்னகைத்தது.

தார தப்பட்டை முழங்க
பூப்பல்லக்கில் அசைந்தாடி
மலர்களின் பாதையில்
கடைசி பயணம்
முடிந்தது.

வீட்டிற்கு திரும்பியவரை
கட்டிப்பிடிக்க வந்த மகளிடம்
குளிக்க வேண்டும்
தொடாதே ‘தூரம்’ போ என்றதும்
மகளுக்கு சந்தேகம்
சாமி பார்த்தால் தீட்டாகுமா?

பி.கு: தங்கமீன் கலை இலக்கிய வட்டத்திற்காக முதன் முதலாக நான் எழுதிய இந்த கவிதைக்கு திரு எம்ஜி சுரேஷிடமிருந்து டிசம்பர் 11ம் தேதி புத்தகப் பரிசு பெற்ற போது எடுத்த படம். இந்த கவிதையை எழுத ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்திய பாலுவுக்கு நன்றி.

 

தூரம்

தூரம்
______

அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
செய்தி கேட்டு கிளம்பியவரை
கட்டிப்பிடித்த மகளிடம்
சாமி பார்க்க போவதாகச்
சொன்னார் அப்பா.

கோயில் பூக்கடையின் அந்த
ரோசாப் பூமாலை
துக்கவீட்டு திருவாளருக்கு
சாத்தப்படுவது பாதி
மொய்த்த வண்டுகளுக்கு தெரியாது.

அசையாத சிலைக்கு
அபிஷேகமும் அலங்காரமும்
சுற்றம் சூழ
கனத்த மௌனத்துடன்
நடந்தேறியது.

மாலையிட்டு
கட்டிய பாதம் தொட்டு
கையெடுத்து கும்பிட்டு
அழுகையுடன் பார்த்தார்
புன்னகைத்தது.

தார தப்பட்டை முழங்க
பூப்பல்லக்கில் அசைந்தாடி
மலர்களின் பாதையில்
கடைசி பயணம்
முடிந்தது.

வீட்டிற்கு திரும்பியவரை
கட்டிப்பிடிக்க வந்த மகளிடம்
குளிக்க வேண்டும்
தொடாதே ‘தூரம்’ போ என்றதும்
மகளுக்கு சந்தேகம்
சாமி பார்த்தால் தீட்டாகுமா?

பி.கு: தங்கமீன் கலை இலக்கிய வட்டத்திற்காக முதன் முதலாக நான் எழுதிய இந்த கவிதைக்கு திரு எம்ஜி சுரேஷிடமிருந்து டிசம்பர் 11ம் தேதி புத்தகப் பரிசு பெற்ற போது எடுத்த படம். இந்த கவிதையை எழுத ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்திய பாலுவுக்கு நன்றி.

வர்தா சிவப்புரோஜா உருது

கண்ணாடிக் கட்டிடங்கள்
கண்களை குருடாக்கி
மின்கம்பங்கள் மாய்த்து
இருட்டிய மாலையில்
கொட்டிய மழையில்
வெறிச்சோடிய சாலைகளில்
வாகனத்தின் மடியை தழுவி
மரங்களை படுக்கப் போட்டு
நவீன நகரத்தைக் கற்பழித்த
புயலுக்கு பெயர்
சிவப்பு ரோஜா:(