சில மரணங்கள் நமக்கு வருத்தத்தை தரும், சில மரணங்கள் பாடங்களை கற்றுத்தரும். ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? கூடு விட்டு ஆவி போனால், கூடவே வருவது என்ன? செல்வம், ஆயுளை மேலும் சில மாதங்களோ, நாட்களோ நீடிக்க உதவுமேயன்றி நிரந்தரமாக்க உதவாது என்பதை மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்தும் சில மரணங்கள். ஆழ்ந்த வருத்தங்கள். #சின்னய்யா
அஞ்சலி கட்டுரை
ஆழ்ந்த இரங்கல்
தன் அழகால், நடிப்பால் தமிழ் இரசிகர்களையும் பிறகு இந்திய திரைப்பட இரசிகர்களையும் கொள்ளை கொண்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. என்னை மிகவும் கவர்ந்த நடிகை. இன்று வரை அவருடைய அழகுடன் கூடிய நடிப்பிற்கு இணையானவர்கள் யாருமில்லை. கமல் ரசிகனாக நான் ஶ்ரீதேவியை கமலுக்கு ஜோடியாக திரையில் மிகவும் இரசித்ததுண்டு. ரஜினி ரசிகர்களும் அவரை ரஜினியின் ஜோடியாக திரையில் இரசித்திருப்பார்கள். முருக கடவுளாய் அவர் குழந்தையில் நடித்த வேடம் அவ்வளவு அழகாக இருக்கும். ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவர்ந்த ஒரு அற்புதமான நடிகை. இவருடைய திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது…ஆழ்ந்த இரங்கல்…
எனக்கு பிடித்த, நான் மிகவும் இரசித்த ‘சாந்தினி’ இந்தி படத்திலிருந்து அவர் பாடிய இந்த பாடலை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்…
அஞ்சலி
ஐந்தாண்டுகளுக்கு முன்பு சின்ன உடல்நலக் கோளாறு வந்தபோது மிகவும் சோர்வடைந்து விட்டேன். அப்போது வீட்டுற்கு வந்தவர் “நானெல்லாம் எவ்வளவு மருத்துவ சிகிச்சைக்கு பிறகும் தைரியமாக எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்கிறேன், மன உறுதி இருந்தால் போதும் அதுவே நாம் நலம்பெற பெரிதும் உதவும்” என எனக்கு தைரியம் சொன்னார். அது இன்றும் என் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.
கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கை வந்தபோது, “ஏதாவது தமிழ் நிகழ்வு நடக்குதா” என்று கேட்டார். பாரதியார் விழா நடப்பதாக நான் சொன்னவுடன், சக்கர நாற்காலியில் இருந்த போதும் அன்று பாரதியார் விழாவில் கலந்துகொண்டார். இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரான இவர் சிறந்த தமிழ் பேச்சாளர்கள் பலருக்கும் மிகவும் பிடித்தவர். நல்ல பல பேச்சாளர்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர், அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவு கொடுத்தவர். தமிழில் நூல்கள் எழுதியுள்ள இவர் தமிழ்மொழி மேல் மிகுந்த பற்றுக்கொண்டவர், சிறந்த பேச்சாளர்.
இலங்கைக்கான மொரிஷியஸ் நாட்டின் சிறப்பு தூதராக பணியாற்றினார். இலங்கையின் சிறந்த தொழிலதிபரான இவருக்கு இலங்கை அரசாங்கம் கடந்தாண்டு ‘தேசபந்து’ விருது கொடுத்து கௌரவித்தது. ஆன்மீகம், மொழி, சமூகப் பணி என கடைசிவரை ஓய்வின்றி பணியாற்றியவர். யாருக்கு உதவி தேவைப்படுகிறது என அறிந்து அவர்களுக்கு கொடுத்துதவிய பெரும்புரவலர்.
சிறியவர், பெரியவர் என அனைவரிடத்திலும் மிக கனிவாக பேசுவார், அன்பானவர், எளிமையானவர், நேர்மறை சிந்தனைக்கு சொந்தக்காரர்.
சிகிச்சைக்காக சிங்கப்பூர் வந்திருந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறைவனடி சேர்ந்தார்.
Seethaவின் மீது அக்கறையும், அன்பும் கொண்டவர். சீதாவின் மாமாவின் இழப்பு எங்களுக்கு மிகுந்த வேதனை தருகிறது. அவருடைய உயிர் சிங்கையில் பிரிந்து, கடைசி பயணம் எங்கள் கண்முன் நடந்தது துயரமானது. தனது அன்னையை இழந்த சில நாட்களிலேயே தானும் மறைந்துவிட்டார். ஒரே வாரத்தில் இருவரும் மறைந்தது எங்களுக்கு மிக பெரிய இழப்பு.
அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
அஞ்சலி
இருபதுக்கு மேல் பேரன் பேத்திகள் இருந்தாலும், ஒவ்வொருவரின் மேலும் தனிப்பட்ட முறையில் அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். அதோடு பேரன் பேத்திகளுக்கு குடும்பங்கள் உருவான பிறகு அவர்கள் ஒவ்வொருவரின் மீதும் அன்பு பாராட்டுவார். என் மீதும் என் மனைவி மற்றும் பிள்ளைகள் மீதும் மிகுந்த பாசம் உடையவர். இப்படி ஒருவரால் எல்லோர் மீதும் இத்தனை வயதிலும் அன்பாக இருக்க முடியுமா என என்னை வியப்பில் ஆழ்த்தியவர்.
அப்படிபட்டவர், எங்களை விட்டு பிரிந்தார் என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. என் மனைவி Seethaவின் பாட்டியின் மறைவு எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
May Her Soul Rest In Peace.
சோ
துக்(க)ளக்..”கம்:(
நான் பல ஆண்டுகளாய் விரும்பி இரசித்து படித்த ஒரே பத்திரிக்கை துக்ளக். சென்னையில் இருந்த போது பொங்கலன்று அவர் கூட்டதிற்கு சில முறை சென்றதுண்டு. இனிமேல் அங்கு பேச ‘சோ’ அவர்கள் இல்லை. அவரை சில முறை மயிலை கபாலீசுவரர் கோயிலில் சந்தித்து வணக்கம் சொன்னதுண்டு. அதே பச்சை ஆடை, வளர்ந்த உருவம், மெல்லிய புன்னகையோடு விசாரிப்பு. சென்னைத் தமிழில் இயல்பாய் வெளுத்து வாங்கிய நல்ல நகைச்சுவை நடிகர். நான் கண்டு வியந்த மாற்றுச் சிந்தனை கொண்ட சிலரில் முதன்மையானவர். அவரின் நையாண்டிக்கு இணை வேறதெவும் இல்லை. இன்றைய மீம்ஸின் பிதாமகன் என்றும் சொல்லலாம். அவருடைய பல அரசியல் கருத்துகளில் எனக்கு உடன்பாடுண்டு. இவரின் ‘முகமது பின் துகளக்’ நாடகத்தை பல முறை கேட்டிருக்கிறேன். காலத்தை கடந்த சிறந்த அரசியல் நையாண்டி நாடகம் அது. அவரும் காலத்தை கடந்து என்றும் நிலைத்திருப்பார்.