நீட் சோதனை அவலங்கள்

பள்ளியில் தயார்செய்யப்பட்டு
சமூகத்தின் கையில் புரட்டிப்பார்க்கப்பட
புதிய புத்தகத்தின் வாசனையாய்ப் புறப்படும்
வெள்ளைத்தாள்களின் தொடக்கத்தில்
சிவப்பு மையில் சோதனைக் கோடுகளைக் கீறல்களாய்க் கிறுக்கித்தள்ளி
மூன்றாம் துளையைத் திறந்துவிட்டு
மூச்சுக்குழாயின் வெப்பம் அதிகரிக்க
காதில் வெளிச்சம் பாய்ச்சி
இருளின் சத்தத்தைத் துளைத்தனுப்பி
நேர்மைப் பின்னல்களைப் பிரித்தெடுத்து
சந்தேகத்தைப் பிழிந்து சாறுத் தேய்த்து
மனத்தில் இரணங்களை விதைத்து
நுழைவாயிலிலேயே மனத்தேர்வு நடத்தித்
தயார் செய்வது நுழைவுத் தேர்விற்கல்ல
தவறாகத் தேர்தெடுத்த தலைவர்களை
அடுத்தமுறையாவது நினைவில் கொள்ள.

Leave a Comment