காந்தள்சூடி

ஒரு புத்தக வெளியீட்டில் பேசுகின்ற சிறப்பு விருந்தினர் எப்படி பேச வேண்டும் என்பதை பேசிக்காட்டினார் கவிஞர் சுகிர்தராணி. கண்ணன்னின் கவிதை புத்தகத்தை வாங்க வேண்டும் என்பதை தாண்டி படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் அதிலுள்ள சிறப்பான கவிதைகளை அவர் எடுத்துச்சொன்ன விதம் அதை மற்ற கவிதைகளோட ஒப்பிட்ட விதம் அதையெல்லாம் விட அந்தக் கவிதைகளை நினைவில் வைத்து பேசியது என எந்த ஒரு ஆர்ப்பாட்டாமோ அலட்டலோயில்லாமல் சிறப்பாக பேசினார்.

கண்ணின் ‘காந்தள்சூடி’யில் என்னை கவர்ந்த பல சிறப்பான கவிதைகள்/வரிகள் இருந்தாலும் இந்தக் கவிதை கண்ணனின் அடையாளமாக மாறும் வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.

தன்னம்பிக்கை
———————
உதிர்ந்தால்
ஒன்றுமற்றுப் போகும்
சிறகுகளால் தான்
தேசங்களைக் கடக்கிறது
பறவை

     

பேரீச்சம்பழம்

சீதா : ஏங்க இந்த பேரீச்சம்பழம் வாங்குனீங்க? போன தடவையே சொன்னேன்ல இதை வாங்காதீங்கனு…

நான்: அதை இப்ப சொல்றேயேமா. நான் இதை வாங்கிட்டு வந்து வீட்டில் வச்சு ஒரு மாசம் ஆச்சே. அன்னைக்கே சொல்லியிருந்தேனா மாத்தியிருப்பேன்ல…

சீதா: நான் இன்னைக்குதானே பார்க்குறேன்.

நான்: அது, உன் தப்பு. வாங்குனவுடனே பார்த்திருக்குணும்.

சீதா: அத அன்னைக்கே பார்த்துட்டேன்….உங்கள அதுக்கப்புறம் வீட்ல இன்னைக்குதான பார்க்குறேன்…

நான் :

#இனிமே_வாரயிறுதியில_ஒருநாளாவது_வீட்ல_இருக்ணும்