ஆழ்ந்த இரங்கல்

தன் அழகால், நடிப்பால் தமிழ் இரசிகர்களையும் பிறகு இந்திய திரைப்பட இரசிகர்களையும் கொள்ளை கொண்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. என்னை மிகவும் கவர்ந்த நடிகை. இன்று வரை அவருடைய அழகுடன் கூடிய நடிப்பிற்கு இணையானவர்கள் யாருமில்லை. கமல் ரசிகனாக நான் ஶ்ரீதேவியை கமலுக்கு ஜோடியாக திரையில் மிகவும் இரசித்ததுண்டு. ரஜினி ரசிகர்களும் அவரை ரஜினியின் ஜோடியாக திரையில் இரசித்திருப்பார்கள். முருக கடவுளாய் அவர் குழந்தையில் நடித்த வேடம் அவ்வளவு அழகாக இருக்கும். ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவர்ந்த ஒரு அற்புதமான நடிகை. இவருடைய திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது…ஆழ்ந்த இரங்கல்…

எனக்கு பிடித்த, நான் மிகவும் இரசித்த ‘சாந்தினி’ இந்தி படத்திலிருந்து அவர் பாடிய இந்த பாடலை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்…

ஶ்ரீதேவி இரங்கல்

தன் அழகால், நடிப்பால் தமிழ் இரசிகர்களையும் பிறகு இந்திய திரைப்பட இரசிகர்களையும் கொள்ளை கொண்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. என்னை மிகவும் கவர்ந்த நடிகை. இன்று வரை அவருடைய அழகுடன் கூடிய நடிப்பிற்கு இணையானவர்கள் யாருமில்லை. கமல் ரசிகனாக நான் ஶ்ரீதேவியை கமலுக்கு ஜோடியாக திரையில் மிகவும் இரசித்ததுண்டு. ரஜினி ரசிகர்களும் அவரை ரஜினியின் ஜோடியாக திரையில் இரசித்திருப்பார்கள். முருக கடவுளாய் அவர் குழந்தையில் நடித்த வேடம் அவ்வளவு அழகாக இருக்கும். ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவர்ந்த ஒரு அற்புதமான நடிகை. இவருடைய திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது…ஆழ்ந்த இரங்கல்… எனக்கு பிடித்த, நான் மிகவும் இரசித்த ‘சாந்தினி’ இந்தி படத்திலிருந்து அவர் பாடிய இந்த பாடலை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்… https://m.youtube.com/watch?v=oIAWNE_pulk

மநீம : ஒரு கற்பனை தொலைக்காட்சி விவாதம் —————————————————- தொலைக்காட்சி நெறியாளர் : இன்றைய விவாதத்தில் கமல் கட்சி குறித்த பேச போறோம். முதலில் கமல் இரசிகர். கமல் இரசிகர் : ஒரு ரசிகனாக, கமல் கட்சி தொடங்கியதில் எனக்கு வருத்தமே, ஏனென்றால் ஒரு மாபெரும் கலைஞனை இந்த திரை உலகம் இழந்துவிட்டது. கமல் இரசிகர் ஆனால் கழகத் தொண்டர் : கமல் நல்லவர்தான், ஆனா அரசியல்ல அவர் எங்களை எதிர்த்து தாக்குப்பிடிப்பது கடினம். கமல் உத்தமனா, வில்லனா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அவருக்கு எங்கள் வாழ்த்துகள். களத்தில் சந்திப்போம் கமல் அவர்களே. கட்சித் தொண்டராக மாறிய இரசிகர் : கமல் ஒரு அறிவாளி, அவர் எந்த துறையில் கால் வச்சாலும் அது குறித்து கரைச்சு குடிச்சிட்டு கலக்குவார்னு இயக்குனர் இமயமே சொல்லியிருக்கிறார். முகநூல் போராளி : ஆமா, ஒரு தொடக்க நிகழ்ச்சியிலேயே பேசத் தெரியல, காவிரி பிரச்சனை பத்தி கேட்டா ஏதோ தண்ணீர், இரத்தம்னு உளறுகிறார். இவர் என்னத்த கலக்கப்போறார்? தமிழ் ஆர்வலர் : இவர் கட்சி பெயரையே ஏதோ சீர்திருத்தம் செய்றேனு புரியாத மாதிரி எழுதியிருக்கிறார். இவர் தமிழ அழிக்காம விட மாட்டாரு. தமிழனுக்கு ஒன்னும் செய்ய மாட்டாரு. கழக ஆதரவாளர் : முதல்ல அவரோட கட்சி கொள்கை என்னனென்னு சொல்லட்டும். எல்லோருக்கும் கல்வினு ஏதோ சொன்னார், சரி என்னவோ வரிசையா அப்படியே சொல்லப்போறார்னு பார்த்தா, சப்புனு முடிச்சிட்டார்…. தமிழ்த் தேசியவாதி : ஒரு நடிகன் தமிழ்நாட்டை ஆளக்கூடாது. ஒரு தமிழன் தான் ஆளனும். மநீம தொண்டர் : கமல் தமிழன் தானே. அப்படிப் பார்த்தால் உங்க தலைவரும் நடிகர்தானே? தமிழ்த் தேசியவாதி : அவரு நடிகர் இல்ல, இயக்குனராக்கும். கழக எதிர்ப்பாளர் : கமல் கட்சி பெயரிலேயே புரட்சி செய்திருக்கிறார். கழகம், கட்சி என்ற இரு சொல்லையும் தமிழக அரசியில் கட்சி வரலாற்றில் இருந்து அகற்றி விட்டார். இது நல்ல தொடக்கம். கமல் எதிர்ப்பாளர் : கமலுக்கு பின்னால் இலுமினாட்டி கும்பல் உள்ளது. அவர் கட்சிக் கொடியில் நட்சத்திரம் உள்ளது. இலுமினாட்டி ஆய்வாளர் : அவர் கட்சி தொடங்கியதே, அமித் ஷாவின் ஆதரவால்தான். காவிகள், தமிழ் நாட்டின் ஓட்டை பிரிப்பதற்காக, ரஜினியையும், கமலையும் களமிறக்குகிறார்கள். இவருக்கு கருப்பில் காவி இருக்கு. அவருக்கு காவியில் கருப்பு இருக்கு. ஆக இருவரும் காவியும் கருப்பும் கலந்த கருமம்தாம். அவர்கள் இருவரும் காவியின் ‘சிலீப்பர் செல்கள்’. அதனால் அவருக்கும் இலுமினாட்டிற்கும் சம்பந்தமில்லை. கமலுக்கும் மும்பைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த கொடி மும்பைல உள்ள தமிழர் பாசறையோடது. மநீம தொண்டர் : அப்படி ஒரு அமைப்பு இருப்பதே எங்களுக்கு இப்பத்தான் தெரியும். ஏன், எல்லோருக்குமே இப்பத்தான் தெரியும். இவங்க ரூம் போட்டு யோசிப்பாங்க போல. காவி ஆதரவாளர் : கமலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்களே தமிழ்நாட்டில தூங்கிட்டுதான் இருக்கோம்….அப்படி பார்த்த நாங்கதான் ‘சிலீப்பர் செல்’. தொலைக்காட்சி நெறியாளர் : இல்லங்க ‘சிலீப்பர் செல்’னா….. சிந்தனைவாதி : அட அத விடுங்க….கமல் கட்சி தொடங்கியது நல்ல நிகழ்வு. ஆனால் அவர் அறிமுகப்படுத்திய உயர்மட்டக்குழுவில் உள்ளவர்கள் அதில் இடம்பெற ஒரே காரணம், கமலின் அபிமானத்தை பெற்றவர்கள் என்ற ஒரே தகுதிதான். அவர்களுக்கு கட்சி நடத்துவது குறித்தோ, ஆட்சி செய்வது குறித்தோ ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மக்களின் பிரச்சனைகளோ, தீர்க்கும் முறைகளோ எதுவும் தெரியாத கமலின் விசிறிகள், அவ்வளவுதான். இவர்களை வைத்து பிக்பாஸ் வேணா நடந்துலாம். இல்லை ஒரு நல்ல மசாலா படம் எடுக்கலாம். கட்சியும் நடத்த முடியாது, ஆட்சியையும் பிடிக்க முடியாது. மய்யநிலைவாதி (நடுநிலைவாதி) : அப்படி, முழுவதுமாக ஒதுக்கி விட முடியாது. அதில், முன்னாள் காவல்துறை அதிகாரி, ஐ ஏ எஸ் அதிகாரி, வழக்கறிஞர், தமிழறிஞர், இலக்கியவாதி, பேச்சாளர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர், சமூக பணியாளர் இப்படி பலரும் உள்ளனர். முகநூல் போராளி : பேச்சாளாரா? யாரு? முதல்ல ராசியா ஒருத்தர் பேசினாரே அவரா? சம்பத்தமே இல்லாம உணர்ச்சிபிழம்பாக கொப்பளித்தார். இதுக்கு அம்மா கட்சி அடிமைகளின் துதிபாடல்கள் எவ்வளவோ மேல்… மநீம தொண்டர் : நாங்க பொது இடங்களிலே கால்ல விழாக்கூடாது, பொன்னாடை போர்த்தக்கூடாது என தெளிவாக எல்லோருக்கும் கட்டளை இட்டிருக்கிறோம். குக்கர் ஆதரவாளர் : நாங்கள் அடிமைகள் அல்ல விசுவாசம் உள்ளவர்கள். அதனால்தான் மக்களும் எங்களுக்கு விசுவாசமாக ஓட்டுப் போடுகிறார்கள். நீங்க எத்தனை கட்சி ஆரம்பித்தாலும் வெற்றி பெறுவது நாங்கதான். நோட்டு உள்ள வரை எங்களுக்கு ஓட்டு உண்டு. ரஜினி இரசிகர் : கமல் என்ன பெரிசா பண்ணிட்டார். எங்க தலைவரு கட்சி தொடக்க விழா பாருங்க உலகமே அதிரும்ல.. மநீம தொண்டர் : ஆமா, அரசியலுக்கு வரேன், வரேனு பல ஆண்டுகளாக சொல்றீங்க. முதல்ல கட்சியை தொடங்குங்க, அப்புறம் அதிருதா இல்ல கலகலத்து போதானு பார்ப்போம். மய்யநிலைவாதி (நடுநிலைவாதி) : ரஜனிக்கு குடும்பம் உள்ளதால், அரசியலுக்கு வந்தால் தோற்றுப் போவார். கமலுக்கு குடும்பம் இல்லாததால் அரசியலில் தோற்றுப் போவார். நித்தி ஆதரவாளர் : கமல் வைரமுத்துவின் நண்பர். அதனால் ஆண்டாளின் எதிரி. எங்கள் கிளையை தமிழ்நாட்ல வேறு பெயர்ல தொடங்க பார்க்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். எங்கள் ஆசிரம பக்த கோடிகள் இதற்கு காணொளி மூலம் சரியான பதிலடி தருவார்கள். மநீம தொண்டர் : என்ன தொலைக்காட்சிய்யா இது…இவன எல்லாம் யாரு இங்க உள்ள விட்டது… தொலைக்காட்சி நெறியாளர் : இல்லங்க அவரும் கமல் இரசிகர்தான், திடீர்னு ‘கன்ஃபூஸ்’ ஆகி வேற அவதாரம் எடுத்துட்டார்…ஒரு நிமிஷம் இருங்க…இதோ நம்ம உலக நாயகனே ‘லைன்’ல வர்றார். வாங்க திரு கமல். நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க? கமல் : ‘வெல்’…ஆ…நான் என்ன சொல்றது, அதான் தில்லி முதல்வர் சொல்லிட்டார், அண்டை மாநில முதல்வர்கள் சொல்லிவிட்டார்கள். நான் ஒன்னே ஒன்னுதான் மக்களுக்கு சொல்வேன். “நீங்க தமிழ்நாட்டுல, சந்தோஷமா, நிம்மதியா இருக்கீங்கனா, இந்த கட்சி உங்களுக்கு இல்ல, நீங்க எல்லோரும் கிளம்பலாம்”…… முகநூல் போராளி (குறுக்கிட்டு): அப்ப சோகமா இருக்குறவங்க போற ‘மய்யம்’மா அது…. தொலைக்காட்சி நெறியாளர்(பதட்டதுடன்..) : இத்துடன் இந்நிகழ்ச்சி ஒரு முடிவுக்கு வருகிறது. வணக்கம்…🙏🙏