வரும் ஞாயிற்றுக்கிழமை, 16-ஏப்ரல்- 2017 அன்று மாலை மணி 6.00க்கு உமறுப்புலவர்
தமிழ்மொழி நிலைய அரங்கில் 'மானுடம் போற்றும் மாணவர்கள்' இலக்கிய
சொற்பொழிவு நடைபெற உள்ளது.
இதை நடத்துபவர்கள், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்
சங்கம்(சிங்கை பிரிவு). கடந்த ஏழாண்டுகளுக்கு மேலாக சிங்கையில் செயல்பட்டு
வரும் இவர்கள் தமிழ்மொழி விழாவில் மூன்றாம் முறையாக பங்கேற்கிறார்கள்.
"கல்வி சார்ந்த சமூக பணி" என்பதை நோக்கமாக கொண்டு செயல்படும் ஜமால்
முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்(சிங்கை பிரிவு) மாணவர்களுக்கு
கணிதம், தேர்வுக்கு தயாராவது, நேர மேலான்மை என பல இலவச கருத்தரங்குகள்
நடத்தி வருகின்றனர்.
ஆதரவற்ற குழுந்தைகளுக்கு உதவுதல், சமய நல்லினக்க விழாக்கள் என இவர்களின்
பணி தொடர்கிறது.
கடந்த மாதம், ஶ்ரீ நாராயண மிஷனை சேர்ந்த முதியோர்களோடு சேர்ந்து
ஜமாலியன்கள் குடும்ப தின விழா கொண்டாடியது அனைவராலும் பாராட்டப்பட்டது.
தமிழ்மொழி விழா 2015ல் கவிஞர் மு மேத்தா கலந்துகொண்டு சிறப்பித்த 'நட்சத்திர
ஜன்னலிலே' என்ற நிகழ்ச்சியும், 2016ல் 'நீயா நானா' புகழ் திரு கோபிநாத்
சிறப்புரையாற்றிய 'மனதில் உறுதி வேண்டும்' என்ற நிகழ்ச்சியும் நடத்தினார்கள்.
இந்தாண்டு சிறப்புரையாற்ற வருபவர் பேராசிரியர், முனைவர் பீ மு மன்சூர். நாற்பது
ஆண்டுகளாக தமிழ் பணி ஆற்றி வரும் இவர் ஜமால் முஹம்மது கல்லூரியின்
முன்னாள் துணை முதல்வராவார்.
நிறைய தன்முனைப்பு உரையாற்றியிருக்கும் இவர் நகைச்சுவையாக மாணவர்களை
ஈர்க்கும் வண்ணம் தன் கருத்துகளை வைப்பதில் வல்லவர். நூல்கள் பல
வெளியிட்டிருக்கும் இவர் பல விருதுகளும் பெற்றுள்ளார்.
வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு ராஜாராம் முன்னிலை வகிக்க, தலைமை
உரையாற்றுகிறார் ஜமாலியன் தலைவர் முனைவர் மு அ காதர். புக்கிட் பாத்தோ
நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
சிறப்பு அங்கமாக மொழி எதற்கு? தமிழ் எதற்கு? என்ற உரையாடலை சாந்தினி,
இன்பா, பிரேமா, தமிழ்ச்செல்வி, பானு, விஜயலட்சுமி ஆகியோர் மூன்றாம் முறையாக
அரங்கேற்றுகிறார்கள். ஆனால் இந்த முறை கருத்துகள் புதியவை.
இன்னொரு சிறப்பு அங்கம் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது. அதை அங்கே வந்து
நேரில் பாருங்கள்.
இந்தாண்டு ஜமாலியன் விருது யாருக்கு என்று தெரியவில்லை. நிகழ்ச்சியில்
தெரியவரும்.
முக்கியமான செய்தி, இந்த விழா சரியாக இரண்டு மணி நேரம் மட்டும் தான். அதற்கு
மேல் ஒரு நிமிடம் கூட தாமதிக்காது என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன். காரணம்,
இவர்களின் உறுப்பினர்கள், தொண்டூழியர்களின் கட்டமைப்பு அப்படி. கடந்தாண்டு
இவர்கள் குழுபடம் எடுத்தவிதம் அதற்கு ஒரு சான்று. இரண்டே நிமிடத்தில்
ஆங்காங்கே நின்றிருந்த உறுப்பினர்கள் படபடவென ஒன்று சேர, ஒரே நிமிடத்தில்
படம் எடுக்க மீண்டும் அவர்கள் இடத்திற்கு அடுத்த சில வினாடிகளில் சென்று
விட்டனர். நான் பார்த்த வியந்த விஷயம்.
அன்றைய நிகழ்ச்சியின் நெறியாளர் திரு ஃபரீஜ் முஹம்மது. தமிழ்த்தாய் வாழ்த்து
பாடயிருப்பவர் செல்வி ஸ்நேஹா முரளி.
கடந்த இரண்டாடுகளாக தரமான நிகழ்ச்சியை கொடுத்த இவர்கள் இந்த முறையும்
சுவையான தமிழ் விருத்தளிப்பார்கள் என நம்பலாம்.
#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்