தமிழ்மொழி விழாவின் ஒரு அங்கமாக வரும் 15-ஏப்ரல்- 2017, சனிக்கிழமை மதியம்
மணி 2:00 முதல் 5:00 வரை "மெய்நிகர் உலகில் புத்தாக்கத் தமிழ்" என்ற நிகழ்ச்சி
நடைபெறுகிறது.
இதை நடத்துபவர் திரு குணசேகரன். இவர் பிக்சிமிட் பிரைவேட் லிமிட்டட்
நிறுவனத்தின் இயக்குனர். இவருக்கு வேறு சில பரிமாணங்களும் உண்டு. நல்ல
பாடகர், இசையமைப்பாளர், தொழில் முனைவர் தொழில்நுட்ப ஆலோசகர் என
சொல்லிக்கொண்டே போகலாம். இவர் வசந்தம் ஒளிவழியில் நிறைய பாடல்கள்
பாடியுள்ளார். அன்மைக்காலத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசைக்கூடத்தில் இசை பயிற்சி
பெற்றார். பின்னர் லன்டன் சென்று இசை பயிற்சி பெற்றுக்கொண்டார். கடந்தாண்டு
தமிழ்பாடல் தொகுப்புக்கு இவரே இசையமைத்து, பாடிய ஒலிவட்டு ஒன்றை
வெளியிட்டார்.
சரி, மெய்நிகரென்றால் என்ன என்று பார்ப்போம். அதாங்க, Virtual Reality. அந்த
காலத்து மாயஜால படங்களில் வரும் காட்சி போல நீங்கள் ஒரு இடத்தில் இருந்து
கொண்டு பல இடங்களுக்கு சென்று வரும் அனுபவத்தை பெறலாம். இந்த பூத
கண்ணாடினு சொல்லுவாங்கள, அது மாதிரி ஒன்ன கண்ணில் மாட்டிக்கனும். இது
கண்ணாடியே பூதம் மாதிரி கொஞ்சம் பெருசா இருக்கும், நாம் போட்டால்
மற்றவர்ளுக்கும் பூதம் மாதிரி தெரியும்:) இதை மாட்டிட்டு ஒரு 'பட்டனை'
அமுக்கினால் போதும். ஒரு முப்பரிமாணக் காட்சி உங்கள் முன் ஓடும். நீங்க அந்த
இடத்திலேயே இருக்குற மாதிரி ஒரு உணர்வை கொடுக்கும். தலையை திருப்பினா
பின்னால் உள்ளதை பார்க்க முடியும். அது ஒரு அருவியாக இருக்கலாம்,
பனிமலையாக, விளையாட்டு அரங்கமாக, வின்வெளியாக இப்படி உண்மையான
இடங்களாவோ கற்பனை காட்சிக்களாவோ இருக்கலாம்.
சரி இதுல குணா என்ன பண்றார்னு கேக்குறீங்களா. இந்த 'கன்டென்ட்' எனப்படும்
காட்சி கருத்துகளை உருவாக்குவது எப்படி அதில் தமிழ் சார்ந்த காட்சிகளை,
விளையாட்டுகளை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக திருவள்ளுவர் நடந்த போகிற
மாதிரி ,அவரிடம் நாம் குறள் குறித்த விவரங்களை கேட்டறிவது மாதிரி ஒரு காட்சியை
உருவாக்கலாம்.
இப்படி, அன்றைய நிகழ்வில், தங்களுக்கு தோன்றும் கற்பனைகளை திட்டமாக
படைக்கவிருக்கிறார்கள் ஐந்து குழுக்கள். அதில் சிறந்த திட்டத்தை தேர்ந்தெடுத்து
அந்த குழுவை ஜெர்மனிக்கு அழைத்துச்சென்று திட்டத்தை செய்லபடுத்தும் நோக்கம்
குணாவுக்கு உள்ளது. கடந்த வாரம் இது தொடர்பான ஒரு பட்டறை நடந்தது. அதில்
சில பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இது முற்றிலும் ஒரு மாறுபட்ட நிகழ்ச்சி. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில்
பயன்படுத்தி தமிழ் சார்ந்த விளையாட்டு செயலிகளை எப்படி உருவாக்குவது என பல
விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், நம்முடைய உடல் அங்க
அசைவுகளுக்கேற்ப தமிழிசையை கேட்கும் ஒரு செயலியையும் காணலாம்.
குணசேகரன் பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல அதை
எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லித்தருவார். தொழில்நுட்பத்தில்
தமிழை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்.
நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து அதற்கான மானியங்கள்
பெற முடியுமா? அரசாங்க அமைப்புகளை எப்படி அனுகலாம்? என்பதும் அவருக்கு
அத்துபடி. அந்த முயற்சிகளை மற்றவர்களுக்கும் பகிர்ந்து மற்றவர்களும் பயனடைய
வேண்டும் என நினைப்பவர். கடந்த மூன்று ஆண்டுகளாக அவருடைய நிகழ்ச்சிக்கு
சென்றிருக்கிறேன். பயனுள்ள சில தகவல்களை பெற்றிருக்கிறேன்.
இந்த நிகழ்வும், அது போல பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். குறிப்பாக
மாணவர்களுக்கு தேவையான ஒரு நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி நடப்பது One North வட்டாரத்தின் உள்ளது. Circle Line MRTல் One
Northல் இறங்கி அங்கிருந்து 5 நிமிடம் நடக்க வேண்டும். பேருந்தில் வருபவர்கள் 191
எண்ணுள்ள பேருந்தில் அவர் வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடம், 10 Central
Exchange Green என்னும் இடத்தில் உள்ள Pixel Studio, Singapore 138649.
இடத்தை தவறவிட்டவர்கள் 96601051 என்ற எண்ணை நிகழ்ச்சி தொடங்குவதற்கு
முன் அவசியமானால் அழைக்கலாம்.
அனைவரும் வருக. ஆதரவு தருக. பயன்பெறுக.
#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்