‘பழமொழி பேசலாம்’ என்ற நிகழ்ச்சியை “உறுமி” தமிழ் மின்னிதழ் என்ற அமைப்பு நேற்று(29-ஏப்ரல்-2017, சனிக்கிழமை) காலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தியது.

இது என்ன நிகழ்ச்சினு கேக்குறீங்களா?

இப்ப இந்த இளைஞர்களிடையே ‘தம்படம்’ என்ற Selfie மிக பிரபலமாயிருக்கு. அதையே ‘தம்-காணொளி'(selfie-video) பதிவா உயர்நிலைப்பள்ளி மாணவர்களை செய்யச்சொல்லலாம் என்ற அதில் ஒரு போட்டியும் ஏற்பாடு செய்திருக்கிறார் ‘உறுமி’யின் தலைவர் திரு கல்யாண்குமார் . இவர் பலதுறைதொழிற் கல்லூரியில் மென்பொருள் துறையில் பணி புரிந்து வருகிறார்.

தமிழ்மொழியை மாணவர்களிடைய கொண்டு செல்வதின் ஒரு யுக்தியாக அவர்களை ‘பழமொழிகள்’ பேசச்சொல்லி அதை அவர்கள் பாணியில் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் ‘YouTube’ல் வலம் வரச்செய்திருக்கிறார். இது நிறையபேர்களுக்கு சென்றடையும் விதமாக அதிக ‘Like’ வாங்குபவர்களுக்கு பரிசை அறிவித்திருக்கிறார். அது தவிர சிறப்பாக பேசிய முதல் ஐந்து மாணவர்களை நடுவர்களை கொண்டு தேர்வு செய்து பரிசும் கொடுத்தார். சாதாரண பரிசல்ல, தங்கத்தை பரிசு கொடுத்தார். தங்கம் எப்படி மதிப்பிழக்காதோ அதே போல் தமிழும் என்றும் மதிப்பிழக்காது என்பதை அறிவுறுத்தும் விதமாக தங்கம் பரிசாக கொடுக்கப்பட்டதாக சொன்னார்.

தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு அவர்கள் புழக்கத்தில் இருக்கும் ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிதான் இது. கடந்த முறை தமிழ்மொழி விழாவில் ‘ ‘பழமொழி நானூறு’ என்ற நிகழ்ச்சி படைத்தார். ஆனால் இந்த முறை இந்த யுக்தியால் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்குகொண்டனர்.

இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாதான் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு பேச்சாளர்கள் இல்லை. எந்த சடங்குகளும் இல்லை. மாணவர்களுக்கு பரிசை அவரவர் பொற்றோர்களே கொடுத்தனர். ஐந்து மாணவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். சிறப்பாக, தமிழ்மொழி குறித்தும், இந்த போட்டியில் தாங்கள் பங்குபெற்றது எப்படி பயனளித்தது, இது சக மாணவர்களை எப்படி பரவலாக சென்றைடைந்து என்பதையும் தெரிவித்தனர். இந்த போட்டியில் தங்களுக்கு உதவிய பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்க்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

மொத்தம் ஒரு மணி நேரத்திற்கு குறைவாகவே நடந்த இந்நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே கலந்துகொண்டாலும் இந்த மாணர்களின் காணொளி பல நாடுகளிலும் உள்ள 5000 தமிழர்களை சென்றடைந்திருக்கிறது என்பதே சிறப்பு. காணொளியை பார்க்காதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கவும்.

இந்த போட்டியில் 1259 ‘Like’ பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றார் செடார் உயர்நிலைப்பள்ளி மாணவி ஸ்வேதா செந்தில்குமார். ‘அரண்டவன் கண்ணுக்கு, இருண்டதெல்லாம் பேய்’ என்ற பழமொழியை விளக்கி பேசியுள்ளார்.

நடுவர்களால் தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள்:
சிறப்பு பேச்சாளர் – எஸ்பி அபிநவ் – யுனிட்டி உயர்நிலைப்பள்ளி
முதல் பரிசு – செந்தில்குமார் ஹரிஸ்வரன் – செயின்ட் கேப்ரியேல் உயர்நிலைப்பள்ளி
இரண்டாம் பரிசு – காவ்யா மணிகண்டன் – பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளி
மூன்றாம் பரிசு – பாலமுருகன் தீபிகா – செடார் உயர்நிலைப்பள்ளி
நான்காம் பரிசு – மிருனாளினி கார்த்திக் – பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளி

பரிசு குறித்த அறிவிப்பு இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம்.

சிறப்பான முன்னெடுப்பு. நல்ல நிகழ்ச்சி.
அடுத்தாண்டு மேலும் சிறப்பாக நடத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பி. கு: ‘உறுமி’ மின்னிதழ் செயலியில் மட்டுமே வேலை பார்க்கும். அதுவும் இப்போது மறு உருவாக்கம் நடைபெற்று வருவதால் இப்போது பார்க்கமுடியாது.

http://www.youtube.com/playlist…

FB.com/Sg.indian

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

29 -ஆம் பல்கலைக்கழகப் கருத்தரங்கு 2017

29 -ஆம் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி/ இலக்கியக்
கருத்தரங்கு 2017
யீசூன் தொடக்கக் கல்லூரி இந்தியக் கலாச்சார மன்றம், பல்கலைக்கழகப் புகுமுக
வகுப்புகளுக்கான தமிழ்மமொழி / இலக்கியக் கருத்தரங்கை நாளை நடத்தவுள்ளது.

நாள் : 22/04/2017 (சனிக்கிழமை)
நேரம் : காலை 8.30 – 12.30 மணி வரை
இடம் : யீசூன் தொடக்கக் கல்லூரி அரங்கு இவ்வாண்டின் கருப்பொருள்: “இளையரும்
இலக்கிய ஈடுபாடும்’’ (Youth and their Literary Involvement)

நோக்கம்: இலக்கியம் நமது சமூகத்தின் கண்ணாடி என்று கூறலாம். கடந்த 50
ஆண்டுகளாகப் பதிப்பிக்கப்பட்ட தமிழ் நூல்கள் யாவும் மின்னிலக்கமாக்கப்பட்டு
இணணயத்தில் கண்டு படித்தறியும் நிலையை நாம் இப்போது பெற்றுள்ளோம். இதை
மாணவரிடையே பரப்பி அவர்களது ஈடுபாட்டைப் பெருக்க வேண்டும்.
1. இளையர்களிடையே சில தற்கால இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தி
அவர்களிடையே இலக்கிய ஈடுபாடு குறித்த ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி
ஆர்வத்தைத் தூண்டுதல்.
2. எதிர்காலத்தில் இலக்கிய ஈடுபாட்டை நம் இளையர்களிடையே அதிகரிக்கும்
வழிவகைகளை ஆராய்தல்.
நிகழ்ச்சி அமையும் விதம்:
படைப்புகள்:
— — — — — — –
1.இலக்கிய ஈடுபாட்டின் அவசியம், பண்பு வளர்ச்சியில் அவற்றின் பங்கு, இலக்கிய
ஆர்வம் கொண்ட சில இளையர்களின் அறிமுகம், இலக்கிய வளர்ச்சிக்கு நமது நாடும்
அமைப்புகளும் வழங்கி வரும் ஆதரவுகள், ஒரு கருத்துக்கணிப்பின் மூலம் இன்றைய
இளையரின் நிலை, இலக்கிய ஈடுபாடு வளர மூத்தோரின் வழிகாட்டுதல்
போன்றவைக் குறித்த ஒரு படைப்பு. (YJC)
2. மூன்று கல்லூரிகள் – நமது நாட்டு எழுத்தாளர்கள் சிலரின் கவிதை, நாடகம்,
சிறுகதை குறித்து ஒரு சிறு படைப்பை முன்வைப்பார்கள். (சிப்பிக்குள் முத்து –
இலக்கிய அறிமுகம்) (from Tamil digitalised texts) NLB ( skit, ted talk, talk show)
எழுத்தாளர் அறிமுகத்தோடு படைப்புகளை அறிமுகம் செய்வர்.(SAJC, JJC, MI )

3.இப்படைப்புகளை ஒட்டி பார்வையாளர்களிடம் ஒரு புதிர்ப் போட்டி நடைபெறும்.
(Kahoot) பரிசுகள் (காசோலைகள்) வழங்கப்படும்.

இடைவேளை…….

4.மாணவர்கள் குழு கலந்துரையாடல் – ‘இலக்கிய ஈடுபாட்டை வளர்ப்பதற்கான
வழிவகைகளை’ ஆராய்ந்து – கொடுக்கப்படும் கணினியில் தங்கள் கருத்துகளை உடன்

பதிவேற்றம் செய்வர். (45 நிமிடங்கள்) ஆசிரியர்கள், பெரியவர்கள் அவர்களுக்கு
வழிக்காட்டிகளாக (facilitators) இருப்பபார்கள்.

5.கருத்தாடல் – குறிப்பிட்ட (கவிதை, நாடகம், சிறுகதை) எழுத்தாளர்கள், வளரும்
இளம் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் (தலைப்பு – இலக்கியத் தேடல்) (45
நிமிடங்கள்) கருத்தாடல் நிகழ்த்துவார்கள். ஒரு தலைவரின் வழிகாட்டுதலோடு. (இது
நடைபெறும்போது மாணவர்களின் குழுப்படைப்புகள் ஆராயப்பட்டுச் சிறந்த 5
படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.)

6.பரிசளிப்பு – படைப்பாளர்களுக்கும் , வெற்றி பெற்றவர்களுக்கும்

7.முடிவு

பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மேனிலை
(குறிப்பாக உயர்தமிழ் படிக்கும்) மாணவர்களும், ஆசிரியப் பெருமக்களும்,
பெற்றோரும், சமூக ஆர்வலர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம். இது
இளையர்களே தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு என்பதால்
நிச்சயமாக மற்ற மாணவர்களுக்கும் பயனளிக்கும்.
ஒரு முன்னேற்பாடு – வருகையளிக்கும் மாணவர்கள் booksg என்ற
இணையத்தளத்திற்குச் சென்று நமது மின்னிலக்கம் செய்யப்பட்டுள்ள தமிழ்
நூல்களைப் (Tamil digital heritage collection) பார்வையிடலாம். புத்தகங்கள்,
நூலாசிரியர்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். (போட்டி உண்டு – பரிசுகளும் உண்டு)
பெரியோர்களும் இளையர்களின் சிந்தணைப் போக்கைப்புரிந்து கொள்ளலாம்.
இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை.

முயற்சி வெற்றியடைய உங்கள் நல்லாதரவை அன்புடன் நாடுகிறோம்
நன்றி. வணக்கம்.

இப்படிக்கு
கருத்தரங்கக் குழு
யீசூன் தொடக்கக் கல்லூரி

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

கலக்கல் நாடக விழா 2017

பொதுவா அலுவலகத்திலேயோ அல்லது பெரிய பன்னாட்டு அமைப்புகளிலேயோ நம்ம ஆளுங்க ஒரு விஷயத்தைச் சொல்லும்போது ரொம்ப அழுத்தமா, சொல்ல வந்த கருத்து போய் சேர்கின்ற மாதிரி சொல்வது குறைவு. இதற்கு சில விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் நான் பார்த்த வரையில் இப்படி நிறைய பேர் இருக்காங்க. ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூட ஒரு உணர்ச்சியே இல்லாமல் சொல்வதுண்டு. ஆனால் அதே செய்தியை மற்ற நாட்டுக்காரங்க பேசும்போது அவங்க அங்க அசைவுகள், முக பாவனைகள் பாருங்க, பல சிவாஜியும், வடிவேலும் குடியிருப்பாங்க. பேச்சாளர் மன்றங்கள் மாதரி சில இடங்களில் இந்த அங்க அசைவுகள், குரல் ஏற்ற இறக்கம் இதெல்லாம் கத்துக்கலாம். ஆனால் ஒரு நல்ல தொடர்புத்திறனை, படைப்புத்திறனை எப்படி மேம்படுத்திக் கொள்வது. அதற்கான அடுத்தகட்ட பயிற்சி நாடகத்தில் கிடைக்குமா?
கிடைக்கும் என்கிறார், “கலக்கல் நாடக விழா 2017″ன் சிறப்பு விருந்தினர் திரு புகழேந்தி ராமகிருஷ்ணன் Pugalenthii Ramakrishnan , அதிபதி அனைத்துலக நாடக நிறுவனத்தின் கலை இயக்குனர். இவர் நாடகத்தில் நடித்துப் பயிற்சி பெற்றால் படைப்பாற்றல் வளரும், பிற்காலத்தில் தங்கள் வேலையிடத்தில் ஒரு திட்டத்தைப் படைக்கும்போது அவர்கள் தன்னம்பிக்கையுடன் சிறப்பாகப் படைக்க முடியும் எனச் சொன்னார்.

இந்த நாடகத்தில் நடிக்கும் மாணவர்கள் மற்ற மொழியினருக்கும் அறிமுகமாக வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் திறன் மற்றவர்களுக்கும் போய் சேரும் என்ற கருத்தையும் முன் வைத்தார். அதோடு,

தற்போதை சிங்கை நாடக வரலாறு குறித்த ஆவணங்கள் நூலகத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை, அதனால் ‘இவண் தியேட்டர்’ கடந்த ஒன்பதாண்டுகளாக அரங்கேற்றிய நாடகங்களின் வசனங்களை ஆவணப்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நாடகங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். ஐந்து நிமிடமே பேசிய அவர் இரத்தினச்சுருக்கமாக நல்ல பல கருத்துகளை நம்முன் வைத்தார்.

சிங்கையில் சில நாடக குழுக்கள் சிறப்பாக நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் “இவண் தியேட்டர்”. இக்குழுவைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருப்பவர் திரு எஸ்.என்.வி நாரா. “இவண் தியேட்டர்” கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றது. அதிலும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கிடையே ‘நாடக போட்டி’ நடத்துகின்றது. இந்த ஆண்டு உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 26-ஏப்ரல்-2017 அன்று மதியம் மணி 2:00க்கு “இவண் தியேட்டரின்” கலக்கல் நாடக விழா நடைபெற்றது.

34 பள்ளிகள் கலந்துகொண்ட இந்த நாடக போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளிக்கான போட்டியில் 2 பள்ளிகளும், தொடக்கப்பள்ளிக்கான போட்டியில் 3 பள்ளிகளும் தங்கள் நாடகங்களை அரங்கேற்றின. இப்போட்டிக்கான மையக்கருத்து ‘வர்ணஜாலம்’.

முதலில் தங்கள் நாடகத்தைப் படைத்த ஜூரோங் உயர்நிலைப்பள்ளி, ஒரு மாணவரின் பல நிலைகளைக் காட்சிகளாக்கினர். மாணவனின் வீட்டில் எழும் பிரச்சனை, நல்ல நண்பனின் அன்பு, சிலரின் மிரட்டல் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் என அனைவரும் நன்றாக நடித்திருந்தனர்.

இரண்டாவதாக, குயின்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி குருதிக் கொடையைக்(ரத்த தானம்) கருவாகக் கொண்டு காட்சிகள் படைத்தனர். சமூக சேவை, குருதிக் கொடை செய்யும் மாணவனைப் பெற்றோர்கள் கண்டிப்பதும் பின்னர் அது எப்படித் தங்களுக்கு உதவுகிறது என்பதைக் கதையாக அமைந்திருந்தனர். நிறைய கதாபாத்திரங்கள், நல்ல ஒப்பனை.

அடுத்துத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான போட்டி தொடங்கியது.

முதலில் சூச்சின் தொடக்கப்பள்ளி தனது நாடகத்தை அரங்கேற்றியது. விசித்திரகுப்தன் பூலோகத்திற்கு வருவதாகவும், சிங்கையிலுள்ள பண்பாட்டை அறிய விரும்புவதாகவும் தொடங்குகிறது நாடகம். ஒரு நண்பரின் உதவியுடன் இரண்டு நாள் தங்கியிருந்து அவரின் குடும்பம், கடைத்தெருவில் கடை வைத்திருக்கும் ஒரு பாட்டி, ஆறாவது படிக்கும் மாணவன், இராணுவத்தில் இருக்கும் இளைஞன் எனப் பலரின் வாழ்க்கைமுறையையும் பார்த்து அவரும் சிங்கையிலே இருக்கப்போவதாக முடிகிறது. நல்ல ஒரு சிந்தனை, யதார்த்த நடிப்பு, அருமையான கூட்டு படைப்பு.

அடுத்து வந்தவர்கள் ஹவ்காங் தொடக்கப்பள்ளி. இவர்கள் நாடகத்தை நான் முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்தேன். விக்ரமாதித்தன் என்ற மன்னன் தன் மகளுக்கு நல்ல தமிழ் பேசும் மாப்பிள்ளையை மணமுடிக்க உலகெங்கும் சென்று கடைசியில் சிங்கை வந்து சுயம்வரம் நடத்தி ஒருவரைத் தேர்ந்தெடுப்பதாக முடிகிறது. நல்ல கற்பனை, அழகு ஒப்பனை, அருமையான நடிப்பு.

கடைசியாக, கான்கார்டு தொடக்கப்பள்ளி தங்கள் நாடகத்தை அரங்கேற்றினார்கள். ஒரு விமானத்தில் பயணம் செய்ய பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் ஆசிரியர் விமானத்தில் ஏறிய பின் சந்திக்கும் சவால்களைக் காட்சிப்படுத்தினர். அவர்கள் கோபம், பொறுமையின்மை, இப்படி தங்கள் குணநலன்களை எப்படி வெளிப்படுத்துகிறார்கள், அது எப்படி மற்றவர்களைப் பாதிக்கிறது என்று நடித்துக் காண்பித்தார்கள். சிறந்த காட்சி அமைப்பு, அருமையான நடிப்பு, நல்ல முடிவு.

இந்தப் போட்டிக்கு திருமதி உமையாளம்பிகை, திரு விக்னேஸ்வரன், திரு எஸ் என் வி நாரா ஆகியோர் நடுவராகப் பணியாற்றினார்கள்.

தேர்வுச் சுற்றில் கலந்து கொண்டவர்களையும் சேர்த்து நல்லா நடித்தவர்களுக்கு நட்சத்திர விருதுகள் கொடுக்கப்பட்டன. ஏன் இதில் சிறந்த நடிகை இல்லை, இதில் சிறந்த நடிகர் இல்லை என்று கேட்காதீர்கள். நாடக கதாபாத்திரங்களுக்கு ஏற்ப விருதுகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

இறுதிச்சுற்றில் சிறந்த நாடகத்துக்கான பரிசை வென்ற பள்ளிக்கு வெற்றிக்கோப்பை வழங்கபட்டது. உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி என இரு பிரிவுகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டன. பரிசு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உயர்நிலைப்பள்ளிக்கான விருதுகள்
———————————
சிறந்த நாடகம்
முதல் பரிசு – குயின்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி
இரண்டாம் பரிசு – ஜூரோங் உயர்நிலைப்பள்ளி
நட்சத்திர விருதுகள்
——————-
சிறந்த கதை – குயின்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி
சிறந்த துணை நடிகர் – சுந்தரேசன் மாதவன், ஜூரோங் உயர்நிலைப்பள்ளி
சிறந்த துணை நடிகை – சிவராமன் லேகா, குயின்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி
தொடக்கப்பள்ளிக்கான விருதுகள்
———————————
சிறந்த நாடகம்:
—————-
முதல் பரிசு – சூச்சின் தொடக்கப்பள்ளி
இரண்டாம் பரிசு – கான்கார்டு தொடக்கப்பள்ளி
மூன்றாம் பரிசு – ஹவ்காங் தொடக்கப்பள்ளி
நட்சத்திர விருதுகள்
——————-
சிறந்த கதை – சூச்சின் தொடக்கப்பள்ளி
சிறந்த நடிகர் – குணசேகரன் நிக்கில் குமார், சூச்சின் தொடக்கப்பள்ளி
சிறந்த துணை நடிகர் – தயாளன் பன்னீர்செல்வம், சூச்சின் தொடக்கப்பள்ளி
சிறந்த துணை நடிகை – சரவணன் பால நிகிலா, சூச்சின் தொடக்கப்பள்ளி
இந்த போட்டியைச் சரியாக தன் அழகு தமிழில் வழிநடத்திச் சென்றார் திரு கார்த்திக் ராமசாமி
Karthik Ramasamy

அவ்வப்போது ஒலிவாங்கி சற்று தகராறு செய்தது. ஒவ்வொரு நாடகத்திற்கும் தலைப்பு சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடுத்து நாடகத்தின் கால அளவு ஐந்திலிருந்து இருபது நிமுடம் வரை நீடித்தது. கால அளவு எல்லோருக்கும் சற்றேறக்குறைய சமமாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நடித்த அனைவரும் ஒருமுறை கூட வசனத்தை மறந்து நிற்கவில்லை, யாருக்கும் எந்த வித பதட்டமும் இல்லை, எல்லா மாணவர்களும் அவ்வளவு சிறப்பாக நடித்தார்கள். சில பள்ளிகள் ஒப்பனை, பொருட்களில்(props) கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டார்கள். நல்ல கற்பனைத் திறன். தொடக்கப்பள்ளி நாடகங்கள் மிகச்சிறப்பு. ஒரு கடையை மூடுவதற்கு கூட அழகாக ஒரு கதவு(ஷட்டர்) மாதிரி ஒன்று செய்து, அது சரியாகவும் வேலையும் செய்தது. மொத்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.

பேச்சு போட்டி, பாட்டு போட்டி, கதை, கவிதை, கட்டுரை எனப் பல போட்டிகள் பார்த்திருக்கிறேன். ஆனால், முதன்முறையாக இப்போதுதான் ‘நாடக போட்டி’ பார்த்தேன். தமிழ்மொழி விழாவில் கடந்த ஒன்பதாண்டுகளாகப் பங்கேற்கும் இவர்களின் நிகழ்ச்சிக்குக் கடந்த இரண்டாண்டுகளாக என்னால் போக முடியவில்லை. இந்தாண்டு மாணவர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள், ஏற்பாட்டாளர்கள் தவிர நான் மட்டுமே இருந்தேன் என்று நினைக்கிறேன். அடுத்த ஆண்டு மாணவர்கள் பங்குபெறும் இம்மாதிரியான ஒரு நல்ல நிகழ்ச்சியை விருப்பமுள்ளவர்கள் யாரும் தவற விட வேண்டாம்.

மாணவர்களுக்காக விழா நடத்துகிறோம் என்று செல்பவர்களுக்கிடையே உண்மையிலேயே மாணவர்களுக்காக விழா நடத்திய ஒரு சில நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. எந்த வித விளம்பரமும் இல்லாமல் எந்த பாராட்டையும் எதிர்பார்க்காமல், முகநூலில் முப்பது பதிவுகள் போடாமல் அமைதியாகத் தங்கள் பணியை செய்து கொண்டிருக்கும் திரு எஸ் என் வி நாரா
Nara Snv போன்றவர்கள் சிங்கையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

https://www.facebook.com/ShanmugamTam/videos/1528337953845042/

                                                          

கலக்கல் நாடக விழா 2017

பொதுவா அலுவலகத்திலேயோ அல்லது பெரிய பன்னாட்டு அமைப்புகளிலேயோ நம்ம ஆளுங்க ஒரு விஷயத்தைச் சொல்லும்போது ரொம்ப அழுத்தமா, சொல்ல வந்த கருத்து போய் சேர்கின்ற மாதிரி சொல்வது குறைவு. இதற்கு சில விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் நான் பார்த்த வரையில் இப்படி நிறைய பேர் இருக்காங்க. ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூட ஒரு உணர்ச்சியே இல்லாமல் சொல்வதுண்டு. ஆனால் அதே செய்தியை மற்ற நாட்டுக்காரங்க பேசும்போது அவங்க அங்க அசைவுகள், முக பாவனைகள் பாருங்க, பல சிவாஜியும், வடிவேலும் குடியிருப்பாங்க. பேச்சாளர் மன்றங்கள் மாதரி சில இடங்களில் இந்த அங்க அசைவுகள், குரல் ஏற்ற இறக்கம் இதெல்லாம் கத்துக்கலாம். ஆனால் ஒரு நல்ல தொடர்புத்திறனை, படைப்புத்திறனை எப்படி மேம்படுத்திக் கொள்வது. அதற்கான அடுத்தகட்ட பயிற்சி நாடகத்தில் கிடைக்குமா?
கிடைக்கும் என்கிறார், “கலக்கல் நாடக விழா 2017″ன் சிறப்பு விருந்தினர் திரு புகழேந்தி ராமகிருஷ்ணன் Pugalenthii Ramakrishnan ,

மேலும் படிக்க…

தமிழ் விக்கிபீடியா

என்னுடைய பேராசிரியர் ஒருமுறை சொன்னார், ஒப்படைப்புகளுக்கு (assignments) ‘விக்கிபீடியா'(Wikipedia) தரவுகளை விவரப்பட்டியலில்(References) சேர்க்கக்கூடாதென்று. பெரும்பாலான பல்கலைக்கழங்களில் அது ஏற்றுக்கொள்ள படமாட்டாது. இதற்கு காரணம் Wikipediaவில் உள்ள தரவுகள்/உள்ளீடுகள் போதிய அளவு சரிபார்க்கப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அதில் பதிவேற்றம் செய்யலாம். இப்போது எப்படி என்று தெரியவில்லை. இது ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழ் விக்கிபீடியாவின் தரம் மேம்பட்டது. அதில் எப்படி பதிவேற்றம் செய்கிறார்கள், அது எப்படி சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பது 2015ல் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இதற்கென நடந்த அமர்வில் இதன் நிர்வாகிகள்/ஒருங்கிணைப்பாளர்கள் விளக்கினார்கள். நான், திண்ணப்பன் ஐயா, பேராசியர் மு இளங்கோவன் இன்னும் சிலர் இதில் கலந்துகொண்டோம். அது மட்டுமல்ல, இதில் பதிவேற்றம் செய்பவர்கள் பொரும்பாலும் தமிழ் நன்கு தெரிந்த, கற்றுத்தேர்ந்த தமிழ் ஆசான்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள். எனக்கு தெரிந்து இதில் பெரும் பங்காற்றியிருப்பவர் பேராசிரியர் மெய்கண்டான் ஐயா அவர்கள். திருக்குறளின் பரிமேலழகர் உரையினை முழுவதுமாக பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில் திருக்குறளை யாப்பு வடிவில் மட்டுமில்லாமல் சொற்களாக எளிதில் மாணவர்களுக்கும் புரியும்படி எழுதியிருக்கிறார் மெய்கண்டான் ஐயா(சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). இவர் பல சங்க இலக்கிய நூல்களை, பாரதிதாசன் பாடல்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவேற்றங்களை செய்துள்ளார். ‘விக்கிமூலம்’ பக்கத்தில் அதை நீங்கள் பார்க்கலாம். இவர் பங்கேற்பை சிறப்பு செய்யும் வகையில் இவருக்கு ‘களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்’ கொடுத்திருக்கின்றனர் விக்கி அன்பு குழுமத்தினர். இவருடைய பதிவேற்றங்களை பயன்படுத்தும் ஆய்வாளர்கள் பலர் உள்ளனர். இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் தமிழ் விக்கிபீடியா நம்பத்தகுந்தது, அதில் மாணவர்களுக்கு தேவையான பல வளங்கள் உள்ளன, அதை தைரியமாக பயன்படுத்தலாம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே.

மேலும் படிக்க…