‘பழமொழி பேசலாம்’ என்ற நிகழ்ச்சியை “உறுமி” தமிழ் மின்னிதழ் என்ற அமைப்பு நேற்று(29-ஏப்ரல்-2017, சனிக்கிழமை) காலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தியது.
இது என்ன நிகழ்ச்சினு கேக்குறீங்களா?
இப்ப இந்த இளைஞர்களிடையே ‘தம்படம்’ என்ற Selfie மிக பிரபலமாயிருக்கு. அதையே ‘தம்-காணொளி'(selfie-video) பதிவா உயர்நிலைப்பள்ளி மாணவர்களை செய்யச்சொல்லலாம் என்ற அதில் ஒரு போட்டியும் ஏற்பாடு செய்திருக்கிறார் ‘உறுமி’யின் தலைவர் திரு கல்யாண்குமார் . இவர் பலதுறைதொழிற் கல்லூரியில் மென்பொருள் துறையில் பணி புரிந்து வருகிறார்.
தமிழ்மொழியை மாணவர்களிடைய கொண்டு செல்வதின் ஒரு யுக்தியாக அவர்களை ‘பழமொழிகள்’ பேசச்சொல்லி அதை அவர்கள் பாணியில் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் ‘YouTube’ல் வலம் வரச்செய்திருக்கிறார். இது நிறையபேர்களுக்கு சென்றடையும் விதமாக அதிக ‘Like’ வாங்குபவர்களுக்கு பரிசை அறிவித்திருக்கிறார். அது தவிர சிறப்பாக பேசிய முதல் ஐந்து மாணவர்களை நடுவர்களை கொண்டு தேர்வு செய்து பரிசும் கொடுத்தார். சாதாரண பரிசல்ல, தங்கத்தை பரிசு கொடுத்தார். தங்கம் எப்படி மதிப்பிழக்காதோ அதே போல் தமிழும் என்றும் மதிப்பிழக்காது என்பதை அறிவுறுத்தும் விதமாக தங்கம் பரிசாக கொடுக்கப்பட்டதாக சொன்னார்.
தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு அவர்கள் புழக்கத்தில் இருக்கும் ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிதான் இது. கடந்த முறை தமிழ்மொழி விழாவில் ‘ ‘பழமொழி நானூறு’ என்ற நிகழ்ச்சி படைத்தார். ஆனால் இந்த முறை இந்த யுக்தியால் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்குகொண்டனர்.
இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாதான் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு பேச்சாளர்கள் இல்லை. எந்த சடங்குகளும் இல்லை. மாணவர்களுக்கு பரிசை அவரவர் பொற்றோர்களே கொடுத்தனர். ஐந்து மாணவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். சிறப்பாக, தமிழ்மொழி குறித்தும், இந்த போட்டியில் தாங்கள் பங்குபெற்றது எப்படி பயனளித்தது, இது சக மாணவர்களை எப்படி பரவலாக சென்றைடைந்து என்பதையும் தெரிவித்தனர். இந்த போட்டியில் தங்களுக்கு உதவிய பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்க்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
மொத்தம் ஒரு மணி நேரத்திற்கு குறைவாகவே நடந்த இந்நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே கலந்துகொண்டாலும் இந்த மாணர்களின் காணொளி பல நாடுகளிலும் உள்ள 5000 தமிழர்களை சென்றடைந்திருக்கிறது என்பதே சிறப்பு. காணொளியை பார்க்காதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கவும்.
இந்த போட்டியில் 1259 ‘Like’ பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றார் செடார் உயர்நிலைப்பள்ளி மாணவி ஸ்வேதா செந்தில்குமார். ‘அரண்டவன் கண்ணுக்கு, இருண்டதெல்லாம் பேய்’ என்ற பழமொழியை விளக்கி பேசியுள்ளார்.
நடுவர்களால் தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள்:
சிறப்பு பேச்சாளர் – எஸ்பி அபிநவ் – யுனிட்டி உயர்நிலைப்பள்ளி
முதல் பரிசு – செந்தில்குமார் ஹரிஸ்வரன் – செயின்ட் கேப்ரியேல் உயர்நிலைப்பள்ளி
இரண்டாம் பரிசு – காவ்யா மணிகண்டன் – பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளி
மூன்றாம் பரிசு – பாலமுருகன் தீபிகா – செடார் உயர்நிலைப்பள்ளி
நான்காம் பரிசு – மிருனாளினி கார்த்திக் – பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளி
பரிசு குறித்த அறிவிப்பு இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம்.
சிறப்பான முன்னெடுப்பு. நல்ல நிகழ்ச்சி.
அடுத்தாண்டு மேலும் சிறப்பாக நடத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
பி. கு: ‘உறுமி’ மின்னிதழ் செயலியில் மட்டுமே வேலை பார்க்கும். அதுவும் இப்போது மறு உருவாக்கம் நடைபெற்று வருவதால் இப்போது பார்க்கமுடியாது.
http://www.youtube.com/playlist…
#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்