“தமிழ்மொழி விழா 2017” வரும் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2ஆம் தேதி மாலை,
வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரன் அவர்களால்
அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படுகிறது.
11ஆம் ஆண்டாக நடைபெறும் தமிழ்மொழி விழா கொண்டாட்டங்களை வளர்தமிழ்
இயக்கம் ஒருங்கிணைக்கிறது. மாதம் முழுதும் நடக்கும் இந்நிகழ்ச்சி தமிழ்
ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
இந்தாண்டு தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்மொழி சார்ந்த பாடல்,
நடனம் மற்றும் நாடகங்கள் இடம்பெறும். உள்ளூர் இளையர்களை முன்னிறுத்தி சில
அங்கங்கள் இருக்கும். முக்கிய இரண்டு இளைஞர்கள் அங்கங்களை சொல்ல
வேண்டுமானால், ஷபீர் மற்றும் பிரவீன் சைவி பங்குபெறும் அங்கம்.
ஷபீர் தமிழால் இன்று தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். இவருடைய இசையில்
வெளிவர இருக்கும் ‘சகா’ படத்திலிருந்து ஒரு பாடலைப் பாட உள்ளார்.
பிரவீன் சைவி இன்று தமிழகத்தில் பின்னணி பாடல் துறையில்
முத்திரைப்பதித்துள்ளார். அவரின் பாடலும் இடம்பெறும்.
இது தவிர சிறார்களின் அழகிய நடனம், கண்ணதாசன், பாரதிதாசன் மற்றும்
இன்றைய கவிஞர் தாமரையின் பாடல்கள் யாவும் இடம்பெறும்.
‘வாழும் மொழி, வாழும் மரபு’ மூன்றாவது பதிப்பு – ‘சொல்லிச் செல்லும்
சொல்லடைகள்’ புத்தகத்தில் பழமொழிகள் விளக்கத்துடன் எளிமையாக
கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளை அடிப்படையாக
வைத்து கருத்துள்ள நாடகம் அரங்கேறும்.
இளையர்களை கவரும் வண்ணம் சில புதிய தமிழ் பாடல்கள் இடம்பெறும்.
இது தவிர பல சிறப்பு அங்கங்கள் உள்ளது.
இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர்கள் யார் என்று உங்களுக்கு ஆவலாக இருக்கும்.
ஆனால் அதச் சொல்ல மாட்டேன்.
ஆக மொத்ததில் நல்ல இயல், இசை, நாடக விருந்து காத்துக்கொண்டிருக்கிறது.
சரி, எங்க நடக்கிறது என்று கேட்கிறீர்களா. முதன் முறையாக புதிய எம்.ஈ.எஸ்
மீடியாகார்ப் அரங்கத்தில் தான். வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக்குழு மற்றும் வசந்தம் ஒளிவழியின் ஆதரவில் தமிழ்மொழி விழா தொடக்க
நிகழ்ச்சி மாலை 6:30 முதல் 8:30 நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அழைப்பிதழ் உள்ளவர்கள் அரங்கத்திற்கு வரலாம். மற்றவர்களுக்கு அரங்கம்
அவர்களுடைய வரவேற்பறை தேடி வரும். நீங்கள் செய்ய வேண்டியது
தொலைக்காட்சியை 'வசந்தம்' ஒளிவழிக்கு மாற்றவேண்டியது மட்டும் தான்:)
#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்
நன்றி : Anbarasu Rajendran