“தமிழ்மொழி விழா 2017” வரும் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2ஆம் தேதி மாலை, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படுகிறது. 11ஆம் ஆண்டாக நடைபெறும் தமிழ்மொழி விழா கொண்டாட்டங்களை வளர்தமிழ் இயக்கம் ஒருங்கிணைக்கிறது. மாதம் முழுதும் நடக்கும் இந்நிகழ்ச்சி தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்தாண்டு தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்மொழி சார்ந்த பாடல், நடனம் மற்றும் நாடகங்கள் இடம்பெறும். உள்ளூர் இளையர்களை முன்னிறுத்தி சில அங்கங்கள் இருக்கும். முக்கிய இரண்டு இளைஞர்கள் அங்கங்களை சொல்ல வேண்டுமானால், ஷபீர் மற்றும் பிரவீன் சைவி பங்குபெறும் அங்கம். ஷபீர் தமிழால் இன்று தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். இவருடைய இசையில் வெளிவர இருக்கும் ‘சகா’ படத்திலிருந்து ஒரு பாடலைப் பாட உள்ளார். பிரவீன் சைவி இன்று தமிழகத்தில் பின்னணி பாடல் துறையில் முத்திரைப்பதித்துள்ளார். அவரின் பாடலும் இடம்பெறும். இது தவிர சிறார்களின் அழகிய நடனம், கண்ணதாசன், பாரதிதாசன் மற்றும் இன்றைய கவிஞர் தாமரையின் பாடல்கள் யாவும் இடம்பெறும். ‘வாழும் மொழி, வாழும் மரபு’ மூன்றாவது பதிப்பு – ‘சொல்லிச் செல்லும் சொல்லடைகள்’ புத்தகத்தில் பழமொழிகள் விளக்கத்துடன் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளை அடிப்படையாக வைத்து கருத்துள்ள நாடகம் அரங்கேறும். இளையர்களை கவரும் வண்ணம் சில புதிய தமிழ் பாடல்கள் இடம்பெறும். இது தவிர பல சிறப்பு அங்கங்கள் உள்ளது. இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர்கள் யார் என்று உங்களுக்கு ஆவலாக இருக்கும். ஆனால் அதச் சொல்ல மாட்டேன். ஆக மொத்ததில் நல்ல இயல், இசை, நாடக விருந்து காத்துக்கொண்டிருக்கிறது. சரி, எங்க நடக்கிறது என்று கேட்கிறீர்களா. முதன் முறையாக புதிய எம்.ஈ.எஸ் மீடியாகார்ப் அரங்கத்தில் தான். வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு மற்றும் வசந்தம் ஒளிவழியின் ஆதரவில் தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சி மாலை 6:30 முதல் 8:30 நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அழைப்பிதழ் உள்ளவர்கள் அரங்கத்திற்கு வரலாம். மற்றவர்களுக்கு அரங்கம் அவர்களுடைய வரவேற்பறை தேடி வரும். நீங்கள் செய்ய வேண்டியது தொலைக்காட்சியை ‘வசந்தம்’ ஒளிவழிக்கு மாற்றவேண்டியது மட்டும் தான்:) #தமிழ்மொழி_விழா_2017 #தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம் #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம் நன்றி : Anbarasu Rajendran

தமிழ்மொழி விழா 2017

“தமிழ்மொழி விழா 2017” வரும் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2ஆம் தேதி மாலை,
வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரன் அவர்களால்
அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படுகிறது.

11ஆம் ஆண்டாக நடைபெறும் தமிழ்மொழி விழா கொண்டாட்டங்களை வளர்தமிழ்
இயக்கம் ஒருங்கிணைக்கிறது. மாதம் முழுதும் நடக்கும் இந்நிகழ்ச்சி தமிழ்
ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

இந்தாண்டு தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்மொழி சார்ந்த பாடல்,
நடனம் மற்றும் நாடகங்கள் இடம்பெறும். உள்ளூர் இளையர்களை முன்னிறுத்தி சில
அங்கங்கள் இருக்கும். முக்கிய இரண்டு இளைஞர்கள் அங்கங்களை சொல்ல
வேண்டுமானால், ஷபீர் மற்றும் பிரவீன் சைவி பங்குபெறும் அங்கம்.

ஷபீர் தமிழால் இன்று தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். இவருடைய இசையில்
வெளிவர இருக்கும் ‘சகா’ படத்திலிருந்து ஒரு பாடலைப் பாட உள்ளார்.

பிரவீன் சைவி இன்று தமிழகத்தில் பின்னணி பாடல் துறையில்
முத்திரைப்பதித்துள்ளார். அவரின் பாடலும் இடம்பெறும்.

இது தவிர சிறார்களின் அழகிய நடனம், கண்ணதாசன், பாரதிதாசன் மற்றும்
இன்றைய கவிஞர் தாமரையின் பாடல்கள் யாவும் இடம்பெறும்.

‘வாழும் மொழி, வாழும் மரபு’ மூன்றாவது பதிப்பு – ‘சொல்லிச் செல்லும்
சொல்லடைகள்’ புத்தகத்தில் பழமொழிகள் விளக்கத்துடன் எளிமையாக
கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளை அடிப்படையாக
வைத்து கருத்துள்ள நாடகம் அரங்கேறும்.

இளையர்களை கவரும் வண்ணம் சில புதிய தமிழ் பாடல்கள் இடம்பெறும்.

இது தவிர பல சிறப்பு அங்கங்கள் உள்ளது.

இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர்கள் யார் என்று உங்களுக்கு ஆவலாக இருக்கும்.
ஆனால் அதச் சொல்ல மாட்டேன்.

ஆக மொத்ததில் நல்ல இயல், இசை, நாடக விருந்து காத்துக்கொண்டிருக்கிறது.

சரி, எங்க நடக்கிறது என்று கேட்கிறீர்களா. முதன் முறையாக புதிய எம்.ஈ.எஸ்
மீடியாகார்ப் அரங்கத்தில் தான். வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக்குழு மற்றும் வசந்தம் ஒளிவழியின் ஆதரவில் தமிழ்மொழி விழா தொடக்க
நிகழ்ச்சி மாலை 6:30 முதல் 8:30 நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அழைப்பிதழ் உள்ளவர்கள் அரங்கத்திற்கு வரலாம். மற்றவர்களுக்கு அரங்கம்
அவர்களுடைய வரவேற்பறை தேடி வரும். நீங்கள் செய்ய வேண்டியது
தொலைக்காட்சியை 'வசந்தம்' ஒளிவழிக்கு மாற்றவேண்டியது மட்டும் தான்:)

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

நன்றி : Anbarasu Rajendran

பேச்சுப் போட்டி

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனைத்துலக தமிழ் பேச்சுப் போட்டியில் சிங்கை பல்கலைகழக மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு கிடைத்தது. வணக்கம் மலேசியா-ஆஸ்ட்ரோ வானவில் இணைந்து சென்னையில் டிசம்பர் 17ஆம் தேதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான ‘பேசு தமிழா பேசு’ என்ற பேச்சுப்போட்டி ஒன்றை SRM பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. மேடைத்தமிழை வளர்ப்பதும், உலகத்தமிழர்களிடையே உறவுகளை வளர்ப்பதுமே மூலநோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி பல்கலைகழக மாணவர்களுக்காக நடத்துவது இதுவே முதல் முறை. நவம்பர் முதல் வாரத்தில் நடக்கவிருந்த இப்போட்டியில் பங்கு பெற விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் தேர்வு காலத்தையொட்டி இருந்ததால் பல்கலைக்கழகம் நிராகரித்துவிட்டது. ஆனால் வேறு சில காரணங்களால் போட்டி டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட இந்த முறை மாணவர்கள் பங்குபெற பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்தது. தேர்வு முடித்த கையோடு போட்டியில் கலந்து கொள்ள விமானம் நிலையம் சென்ற மாணவர்கள் ‘வர்தா’ புயல் காரணமாக விமானமின்றி திரும்பி விட்டனர். மீண்டும் அடுத்தநாள் சென்னை சென்று, பிறகு போட்டியில் கலந்து கொண்டு ஊக்கப்பரிசு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. பரிசு பெற்ற திரு அருண் வாசுதேவ் கிருஷ்ணன், திரு செம்பியன் சோமசுந்தரம், திரு ஜெரமி ஜோயல் பீட்டர் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். “மலேசியா, இந்தியா, இலங்கை, மியன்மார் என்று பல நாடுகளிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொள்ள பதிவு செய்திருக்கின்றனர், ஆனால் சிங்கப்பூரிலிருந்து மாணவர்கள் யாரும் இதுவரை பதிவு செய்யவில்லை. சிங்கப்பூரின் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பது எனக்கு உறுத்தலாக இருக்கின்றது” என்று கடந்த அக்டோபர் மாதத்தில் பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன் என்னைத் தொடர்புக் கொண்டார். அதற்கான முயற்சியில் எனக்கு உதவிய மாணவர்கள் அருள் ஓஸ்வின், அருண் வாசுதேவ் அவர்களுக்கு என் நன்றி. தொடர்ந்து தகவல்கள் கொடுத்து ஊக்கப்படுத்தி சிங்கையிலிருந்து மாணவர்கள் பங்கு பெற விரும்பிய பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன் அவர்களுக்கும் என் நன்றி. இப்போட்டியில் கலந்து கொள்ள மாணவர்களுக்கான விமான பயணச்சீட்டுச் செலவை எந்தவித மறுப்பும் இல்லாமல் உடனே ஏற்றுக் கொண்ட தமிழர் பேரவை அதன் தலைவர் திரு பாண்டியன், வணக்கம் மலேசியா திரு தியாகா, ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன், புரவலர் திரு ஜோதி மாணிக்கம், சமூக தலைவர் திரு நிஜாம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏🙏 தொடர்ந்து அனைத்துலக அரங்கில் சிங்கை மாணவர்கள் தடம் பதிக்க வாழ்த்துகள்💐💐 பி.கு: வணக்கம் மலேசியா-ஆஸ்ட்ரோ வானவில் இணைந்து தொடக்கக்கல்வி மாணவர்களுக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக ‘மாணவர் முழக்கம்’ என்ற பெயரில் பேச்சுப் போட்டியை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் துபாயில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சிங்கை தொடக்கக்கல்வி மாணவி ஹர்ஷிகா மூன்றாம் பரிசு பெற்றார்.

தமிழ்மொழி மாதத்தின் இரண்டாவது நிகழ்ச்சி, திருக்குறள் விழா 2017. வரும் சனிக்கிழமை, ஏப்ரல் 1ம் தேதி மாலை மணி 6:00க்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெறும் இவ்விழா தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் முத்திரை விழா. இந்தாண்டு இவ்விழாவின் சிறப்பம்சம் மூன்று முத்தான சிங்கப்பூர் பேச்சாளர்களின் சிறப்புரை. அறத்துப்பால் குறித்து பேசவிருக்கும் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் ஒரு சிறந்த பேச்சாளர். ஐயா சாலமன் பாப்பையா, குன்றக்குடி அடிகளார் ஆகியோருடன் பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் உடையவர். சிங்கையில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரியும் இவரது பேச்சு கருத்தாழமுடையதாக இருக்கும். தெரிந்து கொள்ள நிறைய விஷயம் இருக்கும். தொழிலதிபராகவும், சிங்கையின் பல தமிழ் அமைப்புகளின் நிரந்திர புரவலராகவும் இருக்கும் ஐயா ஜோதி மாணிக்கவாசகம் பொருட்பால் குறித்தும் பேசுவது பொருத்தமே. கலகலப்பான பேச்சில் நம்மை கட்டிபோடும் இவர் நகைச்சுவையோடு வாழ்க்கையின் யதார்த்தங்களையும் புட்டுவைப்பார். மிகவும் எளிமையாக தன் கருத்துகளை முன் வைப்பதில் வல்லவர். நகைச்சுவை நங்கூரம் என்று எங்களால் அன்பாக அழைக்கப்படும் முனைவர் மன்னை ஐயா அவர்கள் இன்பத்துப்பால் குறித்து சிறப்புரையாற்றயிருக்கிறார். இவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மேடைப்பேச்சாளராக வலம் வருபவர். சிங்கையில் ஆசிரியராக பணிபுரியும் இவரின் பேச்சுக்கு பல இரசிகர்கள் உண்டு. நகைச்சுவையுடன் கூடிய இலக்கிய பேச்சுக்கு நான் உத்தரவாதம். குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். என்ற குறளுக்கேற்ப மழலைகளின் பேச்சும், உயர்நிலைப்பள்ளி மாணவரின் சிறப்பு பேச்சும் இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சமூகத்திற்கு சில கோரிக்கைகளை வைக்கும் தலைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் இந்த ஆண்டும் சில முக்கிய வேண்டுகோளையும் அறிவுரைகளையும் முன் வைப்பார் என எதிர்ப்பார்க்கலாம். தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் விழா என்றாலே நேரக் கட்டுப்பாடுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சின்ன சின்ன விஷயங்களும் நுட்பமாக கவனித்து செயல்படுத்தப்படும். அதற்கான அவர்களின் உழைப்பு கொஞ்சமல்ல. நிறைய தொண்டூழியர்களின் ஈடுபாடும் ஆர்வமும் அதன் பின்னனியில் உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு திருக்குறள் போட்டிகள் மீண்டும் நடைபெற்றது. அதற்கான பரிசுகள் விழாவில் வழங்கப்படும். இந்த ஆண்டு திருக்குறள் விழாவுக்கு கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அதனால் இவ்விழாவிற்கும் இருக்கை கிடைக்க முந்துங்கள். கூடுதல் நாற்காலி ஏற்பாடு செய்திருப்பார்கள் என நம்புகிறேன். விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். #தமிழ்மொழி_விழா_2017 #தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம் #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

இந்த ஆண்டு தமிழ்மொழி விழா வரும் வார இறுதியில் தொடங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக ஏப்ரல் 1ம் தேதி, சனிக்கிழமை காலை மணி 10க்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை வழங்கும் “யுத்தம் 2017” நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இது முற்றிலும் மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சி. எட்டு தொடக்கக் கல்லூரி, எட்டு உயர்நிலை பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் முற்றிலும் மாறுபட்ட சொல்வளம் பெருக்கும் விளையாட்டு நிகழ்ச்சி. தமிழ் புழக்கத்தை அதிகரிக்கும் வண்ணம் பல சுற்றுகளாக தொழில்நுட்ப உதவியுடன் புதிர் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு கூடுதல் சிறப்பம்சமாக நகைச்சுவை சுற்றும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்துமே மாணவர்களிடம் பேச்சுத்தமிழை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரம் போவதே தெரியமால் விறுவிறுப்பாக நடைபெறும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த ஆண்டு வேறு ஒரு நிகழ்ச்சி இருந்ததால் மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் இருந்தனர். இந்த ஆண்டு அதே நேரத்தில் வேறு நிகழ்ச்சி இல்லை, இதுவே முதல் நிகழ்ச்சி, அதோடு உமறுப்புலவர் அரங்கில் நடைபெறுவதால் பலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சீக்கிரமே வந்து இருக்கையைப் பிடித்துக் கொள்ளுங்கள். #தமிழ்மொழி_விழா_2017 #தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம் #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம் https://www.facebook.com/NUSTLS/posts/813465038809483:0