வாட்ஸப்பில் பகடி

இது வாட்ஸப்பில் வந்தது…அருமையான பகடி:) 😄😄😄😄 டேய், நம்ம ஸ்கூலுக்கு ஒருத்தரை புது ஹெச் எம்மா ப்ரோமோட் பண்ண போறாங்க. யாரு கணக்கு சாரா..? இல்லை அறிவியல் டீச்சரா..? இல்லை தமிழய்யா தானே..? ம்ஹூம் அப்படின்னா இங்க்லிஷ் சார் தான்..! கிடையாது. என்னாது… அப்படின்னா அந்த ஹிஸ்டரி ஜியாக்ரபி மிஸ்சா..! இந்த வருஷம் வேலைக்கு சேர்ந்து… இன்னும் கல்யாணம் கூட ஆகாத ஜுனியர்மோஸ்ட் டீச்சருக்கா அதுக்குள்ளே ஹெச் எம் ப்ரோமோஷன்..? என்னடா சொல்றே..? இல்லைடா… நம்ம ஸ்கூல் பியூன் சசிகுமார் சித்தப்பு இல்லே… அவருதான்டா நெக்ஸ்ட் ஹெச் எம்..! என்னது… சித்தப்புவா..? ஆமாடா. ரொம்ப வருஷமாவே அவரு நம்ம எக்ஸ் ஹெச் எம் ஆபீசிலேயே… ஹெச் எம் கூடவே ஒண்ணாவே இருந்து ஹெச் எம் எங்கே போனாலும் கூடவே போயி உதவி பண்ணிக்கிட்டு இருந்தார்லே… அதுனாலே அவருதாண்டா அந்த போஸ்டுக்கு சரியான ஆளுன்னு சொல்லி… எல்லா டீச்சிங் ஸ்டாஃபும் ஒன்னு கூடி அவரையே தேர்வு பண்ண போறாங்களாம்டா. நம்மகிட்டேலாம் யாருமே கருத்து கேட்க மாட்டாங்களாடா… நாம இல்லைன்னா ஸ்கூலே இல்லையேடா மச்சான்… ஆமான்டா… பரீட்சை வரட்டும்…

வர்தா சிவப்புரோஜா உருது

கண்ணாடிக் கட்டிடங்கள்
கண்களை குருடாக்கி
மின்கம்பங்கள் மாய்த்து
இருட்டிய மாலையில்
கொட்டிய மழையில்
வெறிச்சோடிய சாலைகளில்
வாகனத்தின் மடியை தழுவி
மரங்களை படுக்கப் போட்டு
நவீன நகரத்தைக் கற்பழித்த
புயலுக்கு பெயர்
சிவப்பு ரோஜா:(

நிற்பதுவே நடப்பதுவே!

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ? கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ? வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும்காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?அங்கு குணங்களும் பொய்களோ? காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? #பாரதி_நீர்_ஞானி #எத்தனை_பாரதி_வந்தாலும்.. #வெள்ளையனே_மீண்டும்_வா

ஶ்ரீ வடபத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. குடமுழுக்கின் போது கருடன் சுற்றி வந்தது சிறப்பு. ஏற்பாட்டாளர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் நன்றி

சோ

துக்(க)ளக்..”கம்:(

நான் பல ஆண்டுகளாய் விரும்பி இரசித்து படித்த ஒரே பத்திரிக்கை துக்ளக். சென்னையில் இருந்த போது பொங்கலன்று அவர் கூட்டதிற்கு சில முறை சென்றதுண்டு. இனிமேல் அங்கு பேச ‘சோ’ அவர்கள் இல்லை. அவரை சில முறை மயிலை கபாலீசுவரர் கோயிலில் சந்தித்து வணக்கம் சொன்னதுண்டு. அதே பச்சை ஆடை, வளர்ந்த உருவம், மெல்லிய புன்னகையோடு விசாரிப்பு. சென்னைத் தமிழில் இயல்பாய் வெளுத்து வாங்கிய நல்ல நகைச்சுவை நடிகர். நான் கண்டு வியந்த மாற்றுச் சிந்தனை கொண்ட சிலரில் முதன்மையானவர். அவரின் நையாண்டிக்கு இணை வேறதெவும் இல்லை. இன்றைய மீம்ஸின் பிதாமகன் என்றும் சொல்லலாம். அவருடைய பல அரசியல் கருத்துகளில் எனக்கு உடன்பாடுண்டு. இவரின் ‘முகமது பின் துகளக்’ நாடகத்தை பல முறை கேட்டிருக்கிறேன். காலத்தை கடந்த சிறந்த அரசியல் நையாண்டி நாடகம் அது. அவரும் காலத்தை கடந்து என்றும் நிலைத்திருப்பார்.