நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ? கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ? வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும்காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?அங்கு குணங்களும் பொய்களோ? காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? #பாரதி_நீர்_ஞானி #எத்தனை_பாரதி_வந்தாலும்.. #வெள்ளையனே_மீண்டும்_வா