“அச்சம் என்பது மடைமையடா” ——————————- கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக பல காரணங்களால படத்துக்கு போகாம(கபாலி உள்பட) இந்தப் படத்துக்கு, நம்ம சிம்புவுக்காகவும், என் பையனுக்காகவும் போனேன். (போன வாரம் ஒரு இந்திப்படம் பார்த்தத கெட்ட கனவா மறந்துட்டேன்) கதாநாயகனின் பேரையே படத்துக்கு தலைப்பா வச்சு படம் வர வேளையில கதாநாயகனோட பேரே என்னன்னு ‘கிளைமாக்ஸ்’ வர சொல்லாம இருக்கும் கௌதம் மேனனின் ‘அஞ்சாமை’ய வரவேற்கலாம். காதல அனுபவிச்சு “அவ ஒரு ஏ.ஆர் ரஹ்மான் பாடல்டா”னு நண்பர்கள் கிட்ட சிம்பு சொல்லும் போது, “‘ஹோசானா’ மாதிரியாடா மச்சான்”னு கேப்பாங்க. அப்ப சிம்பு “அதுலே கதாநாயகி நம்ம வீட்டு மாடில இருப்பா, இதுல கீழேயே நம்ம கூடவே நம்ம விட்லேயே இருக்காடா”னு சொல்லும்போது ‘தியேட்டர்’ ல விசிலும், கைக்தட்டலும் அடுத்த வசனத்தை கேட்க விடல. விஸ்வரூபம் படத்துல கமலையும், பூஜாவையும் கட்டி வைத்து முட்டிப் போட வச்சிருப்பாங்களே…அப்ப அப்பாவிய இருக்க கமல் அப்படியே சுழன்று எந்திரிச்சு சுத்தி சுத்தி அடிப்பார்ல…அந்த மாதிரி ஒரு காட்சி, சிம்புவையும், மஞ்சிமாவையும் முட்டி போட வைத்து வில்லன்கள் சுடப்போகும் போது எடுத்திருப்காங்க. அப்பவும் விசிலும், கைக்தட்டலும் பறக்கும். இந்த மாதிரி இரசிக்கும்படியான பல வசனங்கள், காட்சிகள் அப்பப்ப வரும். ஹெல்மட்டே போடாம கன்னியாகுமரி வரைக்கும் ‘பைக்’ல போற கதாநாயகனும், கதாநாயகியும் திடீர்னு ‘ஹெல்மெட்’ போடறது, ‘பைக்’ மெதுவா போற மாதிரி காண்பிக்கிறது, எதிர்த்தாப்புல பெரிய ‘டிரக்’ வேகமாக வரற்து எல்லாம் பார்த்தவுடனே சரி ஆக்ஸிடன்ட் ஆகப்போகுது, ரத்த வெள்ளத்தில் கிடக்கப் போறாங்கனு ஒரு சராசரி சினிமா இரசிகனா யூகிச்சா…அங்க வச்சாரு ஒரு டிவிஸ்ட்ட…தமிழ் சினிமா வரலாற்றிலேயே பார்த்திருக்காத ஒன்று. என்னன்னு படத்துல போய் பாருங்க. படத்துலே ‘தள்ளிப் போகாதே’ பாடல் எடுக்கப்பட்ட விதமும், பாடலும், “அவளும் நானும்” பாடலில், விஜய் யேசுதாஸ் குரலும் மிக அருமை. அதேபோல் பாரதிதாசன் வரிகளான ‘அவளும் நானும்’, ‘ஷோக்காளி’, ‘ராசாளி’, ‘இது நாள்’ ன்னு எல்லா பாடல்களும், வரிகளும் அப்படித்தான் இருக்குது. அருமை அருமை அருமை. போன வாரம் இந்திப்படத்துக்கு போனேனு சொன்னேன்ல. அது ‘கரன் ஜோஹர’ நம்பி போன ‘ஹே தில் ஹை முஷ்கில்’கிற படம். பார்த்துட்டு, ஏன்டா இந்தப் படத்துக்கு போனோம்னு கடுப்பாகி வெளிய வந்தது வேற கதை. அந்தப்படம் முழுக்க லன்டண், பாரீஸ், விய்ன்னானு எடுக்கப்பட்ட படம். கதைகளம் அப்படி. அப்ப நினைச்சேன் வெளிநாட்லேயே எடுத்தா தான் இந்திப்படம் போலனு. ஆனா ‘அச்சம்….’ படத்துல தமிழ்நாட்ல உள்ள சில இடங்கள அவ்வளவு அழகா படம் பிடிச்சி காண்பிச்சிருப்காரு ‘டேன் மெக்கர்தர்’ங்கிற ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளர். இவர் ஏற்கனவே கௌதம் மேனனோட ‘என்னை அறிந்தால்’ பண்ணியிருக்காரு. அதுக்காகவும் இசைய அந்த ‘எஃபக்ட்ல’ இரசிச்சு கேக்கவும் தயவுசெய்து இந்தப்படத்தை ‘தியேட்டர்’ல போய் மட்டும் பாருங்க. கண்ணுக்கும் காதுக்கும் இனிமையான காதலுடன் கூடிய அருமையா இசை விருந்து படத்தின் முதல் பாதி. என்ன மாதிரி இளைஞர்களுக்கு(😄) இது ரொம்ப பிடிக்கும். ஆனா இடைவேளைக்குப் அப்புறம் கௌதம் மேனன் நம்மள மாதிரி ‘பாப்கார்ன்’ சாப்பிட எந்திரிச்சு போக அந்த சீட்டை நம்ம பழைய தமிழ் சினிமா தேய்வழக்கு இயக்குநர்கள் யாரோ பிடித்துக்கொள்ள படம் ‘ஆம்புலன்ஸ்’ல ஏறிடுச்சு. வண்டியே ஓட்ட தெரியாதுனு சொல்ற சிம்பு, உயிருக்கு போராடிக்கிட்டிருக்குற, பிழைக்கறது கஷட்டம்னு சொல்லப்படுற ஒரு நோயாளிய ‘ஆம்புலன்ஸ்’ல வச்சுகிட்டு ஒரு ‘ஜீப் சேஸ்’ காட்சில வண்டி ஓட்டுவாரு பாருங்க…மிடில. பைக்ல அடிபட்டு, கைய கட்டி தொங்க விட்டுருக்க சிம்பு அப்படியே நேரா மருத்துவமனையிலிருந்து போய் கட்ட கழட்டி விட்டுட்டு சண்டை போடுவாரு பாருங்க அது அடுத்த மிடில. அதக்கு பிறகு திடீர்னு திடீர்னு சர்வசாதரணமாக சுடறது, சாவுறதுனு இப்படியே போற படத்துல, ஏன் வில்லன்க கதாநாயகிய தொரத்துராங்கனு கடகடவனு சின்ன பசங்களுக்கு கதை சொல்ற மாதிரி சொல்வாங்க பாருங்க, அது இன்னொரு மிடில… அதையெல்லாம் தாண்டி மூனு வருஷத்துக்கு பிறகு, அப்படினு ஒரு டிவிஸ்ட்டோட வரும் போது, பக்கத்துல பையன்கிட்ட இப்ப ‘இதுவாத்தான்’ வருவாரு பாருனு சொன்னேன்…அதே மாதிரி வந்து நம்மளையும் ஒரு கதாசிரியராக்கிய பெருமை இந்தப்படத்தோட இரண்டாவது பாதி இயக்கனர்களுக்கு உண்டு. ஆனா இந்தப்படத்துல சிம்பு மிக இயல்பா நடிச்சிருப்பாரு. பல இடங்கள்ல கமலை ஞாபகப்படுத்துறாரு. ஒரு வேளை கமல் இரசிகன்றதால எனக்கு அப்படி தெரியுதானு தெரியல. மஞ்சிமாவும் அவர் நடிப்பும் அருமை. மொத்தத்துல படத்தை முதல் பாதிக்காக பார்க்கனும்னா பார்க்கலாம். அப்ப இரண்டாவது பாதினு கேக்கறவங்களுக்கு… “அச்சம் என்பது மடைமையடா….”