“ஏங்க லேட்டு, இவ்வளவு பையையும் வச்சிக்கிட்டு எவ்வளவு நேரமா இந்த கடை வாசலிலேயே நிக்குறது”னு நம்மள கொல குத்தம் செஞ்ச ரேஞ்சுக்கு திட்டி தீர்க்கும் மனைவி, இப்பெல்லாம் அரை மணி நேரம் லேட்டா போனாலும் ஒன்னும் சொல்றதில்லை. 10 பிடிச்சேன், 20 பிடிச்சேன்னு மகிழ்ச்சியா இருக்காங்க. வாழ்க போக்கிமோன்!!!
Month: August 2016
பொதுச் சேவை விருது
“ஏங்க, நாளைக்கு காய்த்திரிக்கு சாயங்காலம் 6 மணிக்கு ‘டான்ஸ் கிளாஸ்’ இருக்கு, 8 மணிக்குத்தான் முடியும், இருந்து கூட்டிட்டு வந்திருங்க. இன்னைக்கே சொல்லிட்டேன், சும்மா அந்த நிகழ்ச்சிக்கு போறேன், இந்த நிகழ்ச்சிக்கு போறேன்னு எங்கேயாவது எஸ்கேப் ஆகலாம்னு பார்க்காதீங்க”னு மனைவி வெள்ளிக்கிழமையே எனக்கு ஒரு முன்னெச்சரிக்கை செய்வாங்க.
நம்ம இந்த வாரம் எங்க போகனும்னு ஒரு மாசம் முன்னாடியே ‘பிளான்’ பண்ணியிருந்தாலும் வேலைக்காவாது. அவங்க போடுற பிளான் தான் செயல்படுத்தப்படும். இது தான் குடும்ப நியதி. இப்படித்தான் என்னை போல பலரும் குடும்பம், பிள்ளைகள்னு வார இறுதியும், கடுமையான வேலை பளுவோட வார நாட்களும் என நம் வாழ்க்கைய கடத்திகிட்டு வருவோம். அதைத் தாண்டி சமூகத்துக்கும், மொழிக்கும், கலைக்கும், நாட்டுக்கும் சேவையாற்றும் மனமும், நேரமும், வசதியும் உள்ளவர்வர்கள் சிலரே உள்ளனர்.
இப்படி பட்ட ஒரு சூழ்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சமூகத்துக்கு தன்னோட நேரத்தை நல்வழியில் செலவு செய்து இவ்வளவு இள வயதில் ‘Pingat Bakti Masyarakat’ PBM) என்ற ‘பொதுச் சேவை விருதை’ வாங்கியிருக்கிறார்கள் நம்மில் பலருக்கு தெரிந்த இரு தமிழர்கள், ஒன்று நண்பர் Nizamமற்றொருவர் நண்பர். Moor Thy . மூர்த்தி மேற்கில் சேவை செய்கிறார், நிஜாம் கிழக்கில் சேவையாற்றுகிறார். ஆளுக்கொரு திசை என்றாலும் இருவரும் பொதுச் சேவையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல.
திலகவதியார் – நாட்டிய நாடகம்
“இப்ப நம்ம எங்க போறோம்னு தெரியுமா? நம்ம வீரமாகாளியம்மன் கோயிலுக்கு போவோம்ல, அங்க சிவன் சன்னதிக்குப் பின்னாடி ஓரத்துல நாலு பேரோட சிலை வச்சிருப்பாங்க தெரியுமா?”னு என் மனைவி என் மகளிடம் கேட்க, “ஆமாம்மா, அப்பா கூட அங்க நின்னு அந்த சாமிககிட்ட பேசிட்டிருப்பாங்களே?” என்று அவள் என்னை வம்பிழுக்க, சிரித்துக்கொண்டே, “ஆமாம், அங்க இருக்கிற நால்வர்ல, முதல்ல உள்ள சாமி கையில, நீ ‘பீச்சு’க்கு மண்ல விளையாட எடுத்துட்டு போவையே, நீளமா மண்ணள்ளுற கரண்டி, அதே மாதிரி வச்சிருப்பார்ல, அவர் பேர் தான் ‘திருநாவுக்கரசர்’. அவரோட அக்கா பெயர் ‘திலகவதியார்’. இவரு இங்க சாமியா நிக்க காரணம் அவங்க அக்கா தான். அவங்கள பத்தின நாட்டிய நாடகம் பார்க்கத்தான் இப்ப நம்ம போயிட்டுருக்கோம்”னு ஒரு முன்னுரை கொடுத்தாங்க என் மனைவி.
நேத்து பிஜிபி அரங்கத்துல நடந்த ‘திலகவதியார்’ நாட்டிய நாடகம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்த சிறந்த ஆன்மீக கலைப் படைப்பு. பல்வேறு வயதுடைய சிவத் தொண்டூழியர்களின் தன்னலமற்ற உழைப்பு.