“மழை” கவிதை (மரபு வகை)
—————————-
(Downtown ரயில் பயண கவிமாலை நிகழ்வுக்கு எழுதியது)
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
தெறித்தோய்ந்த மழையதுவோ நின்ற பின்னும்
தெருவினிலே பாய்ந்தவெள்ளம் வடிய வில்லை
எரிப்பதற்கு மின்சாரம் அங்கு மில்லை
எரியூட்ட காய்ந்தவிற கெங்கு மில்லை
வெறித்திருந்த மயானத்தில் தோண்ட உள்ளே
வெறும்நீராய்; புதைத்திடவும் முடிய வில்லை
மரித்தவரை வீட்டில்வைத் தழவும் கூட
மனிதர்கள் யாருமிங்கே அருகில் இல்லை!